இவர் மட்டும் இல்லை என்றால், நான் இல்லவே இல்லை – சிவகார்த்திகேயன் உருக்கம் !

0
1998

நடிகர் சிவா கார்த்திகேயன், நயன்தாரா, மலையாள நடிகர் நஸ்ரியாவின் கணவர் பஹாத் பாஸில் மற்றும் ஸ்நேகா நடிக்க ஜெயம் ராஜா இயக்கியுள்ள படம் வேலைக்காரன். இந்த வருட இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்’ என்ற ஒரு பாடல் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு அனிருத் இசையமைதிருகிக்கிறார்.
நேற்று படத்தின் இச்சியா வெளியீட்டு விழா சென்னையில் நடந்து. விழாவில் நடிகர்கள் மன்சூர் அலிகான், சதீஷ், ரோபோன சங்கர், காளி வெங்கட், ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். பின்னர் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை லைவாக பாடினார். பின்னர், படத்தின் ஹீரோ சிவா கார்த்திகேயன் பேசியதாவது,

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் நடிச்ச முதல் படம் ‘தல அஜித்’ கூடத்தான் ! எந்த படம் தெரியுமா ?

- Advertisement -

முதலில் வேலைக்காரன் என்ற தலைவர் பட டைட்டிலை வைக்க யோசித்தேன், பின்னர் இயக்குனர் மோகன் ராஜ் கூறியதால் சரி சொன்னேன். படத்தில் அனிருத் பேக்ரவுண்ட் மியூசிக்கில் பட்டையை கிளப்பி இருக்கிறார். ட்விட்டர், பேஸ்புக்கில் அனிருத் இல்லை என்றால் நான் இல்லை என ரசிகர்கள் கூறுகிறார்கள்.
அது உண்மை தான், அனிருத் இல்லை என்றால் நான் இப்போது இங்கு இல்லை. அவர்கள் நினைப்பது போல் தான் நானும் நினைக்கிறேன். அவ்வாறு ரசிகர்கள் கூறுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனக் கூறினார் சிவா கார்த்திகேயன்.

Advertisement