சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே கோடிகளில் சம்பளம் வாங்கும் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார்.
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல பாலா நடித்திருக்கிறார்கள். ஏலியன் ஜனரில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதோடு பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
அமரன் படம்:
இந்த படத்திற்கு அமரன் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படை பற்றிய வசனங்களும், தீவிரவாதிகளுடன் சண்டை காட்சிகளும் காட்டப்பட்டிருக்கிறது.
படம் குறித்த சர்ச்சை:
இதன் மூலம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆனால், டீசரில் இடம் பெற்ற சில காட்சிகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பலர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமிட்டாகி இருக்கும் படங்கள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவா நடிக்கிறார். தற்போது இதற்கான முதல் கட்ட படபிடிப்பு தொடங்கி இருக்கிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தான் இயக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் கால்ஷீட் பிரச்சனை:
இது மட்டும் இல்லாமல் இன்னும் ஒரு படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தை மாஸ்டர், லியோ படங்களை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம்தான் தயாரிக்கிறது. அதற்காக சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். அந்த படத்தை அயலான் பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் தான் இயக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஆர் ரவிக்குமார் அவர்கள் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படி தொடர்ந்து ஐந்து படங்களில் சிவகார்த்திகேயன் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்கள் எல்லாம் முடிவதற்கு 2026 ஆம் ஆண்டில் தொடங்கிவிடும் போலிருக்கிறது.