2019 ஆம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவ கார்த்திகேயனின் பெயர் வாக்கு பட்டியிலில் இல்லை என்ற செய்தி வெளியானது.
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது.
அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை. எனவே அவர் ஒட்டுப்போட செல்லவில்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஒட்டு போட்ட பின்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வாக்கு பட்டியிலில் தனது பெயர் இல்லை என்று தெரிந்த பின்னர் சரியான ஆதாரங்களை சமர்பித்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். சர்கார் பாணியில் ஓட்டுரிமைக்காக போராடி சிவகார்த்திகேயன் தனது கடமையை ஆற்றியுள்ளார் என்று அவரது ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.