பிரின்ஸ் நஷ்டத்திற்கு பொறுப்பேற்று கப்பம் கட்டும் சிவகார்த்திகேயன் – எத்தனை கோடி தெரியுமா ?

0
450
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

பிரின்ஸ் :

இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதேபோல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் அனுதிப் இயக்கத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் மற்றும் கதாநாயகியாக உக்ரேனிய நடிகை மரிய ரைபோஷப்கா நடித்த திரைப்படம் பிரின்ஸ். மேலும் இப்படத்தில் காமெடிக்காக சூரி, சத்யராஜ், பிரேம்ஜி போன்ற நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

- Advertisement -

பெரும் தோல்வி :

இப்படத்தினை சுரேஷ் பிரோடுக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா தயாரிப்பில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வெளியாகிஇருந்தது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இந்த படம் பெரும் தோல்வியை தளுவியது. படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்த பிறகே ரசிகர்களா மத்தியில் எதிர்மறை கருத்துக்கள் வெளியாக தொடங்கின. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியை தழுவியது இந்த பிரின்ஸ் திரைப்படம்.

நஷ்டத்தை ஈடு செய்த சிவகார்த்திகேயன் :

இப்படத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான காமெடி மற்றும் காதல் கதை இருந்ததால் சரி என்று நடித்திருந்தார். ஆனால் இப்படத்தில் எதிபார்த்த அளவிற்க்கு கதை மற்றும் காமெடி இல்லாத காரணத்தினால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ப்பதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இப்படத்தின் தோல்விக்கு நஷ்ட ஈடாக சிவகார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சாரிப்பில் 50 சதவிகித நஷ்டத்தை கொடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

-விளம்பரம்-

தெலுங்கு மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவான இப்படத்தை தமிழ்நாட்டில் மதுரை அன்புச் செழியன் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தார். ஆனால் படம் சரியாக போகாததால் திரையரங்க விநியோகஸ்த்தர்களுக்கு சுமார் 12கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த நஷ்டத்தில் 50 சதவிகிதம் சுமார் 6 கோடி ரூபாயை சிவகார்த்திகேயன் மற்றும் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisement