தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடும் உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் தற்போது சிவா இருக்கிறார். மேலும், கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த அமரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை செய்தது. இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதை அடுத்து குட் நைட் பட இயக்குனர் விநாயக் குட் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட் ஆகி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:
இது தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் , விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் ஒரு படம் என்று சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மதராசி. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

விழாவில் சிவகார்த்திகேயன்:
இதில் மதராசி படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், மற்ற நடிகர்களுடைய ரசிகர்களை அவ்வளவு ஈசியாக நம்ம பக்கம் திருப்ப முடியாது. விஜய் சார் அரசியலுக்கு போனாலும், அஜித் சார் பேன் கிளப் கலைத்தாலும், கமல் சார் வெற்றி தோல்வி தாண்டி வந்தாலும், ரஜினி சார் சினிமாவுக்கு வந்து 50 வருஷம் ஆனாலும் அவர்களுக்கான பேன்ஸ் அப்படியேத் தான் இருப்பார்கள். அவர்களுக்கு அப்புறம் சூர்யா, விக்ரம், தனுஷ் சிம்புன்னு எல்லோருக்குமே ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் அந்த மாதிரி ரசிகர்கள் சேர்ந்து கொண்டு வருகிறார்கள். பேன்ஸ் எல்லாருமே லாயல்.
https://youtube.com/shorts/w5-akat3ljo?si=NL7z6R5A9tr1yPRU
விஜய் பற்றி சொன்னது:
யாரையும் அவ்ளவு ஈசியாக தூக்கிட முடியாது. ஒரு படம் நன்றாக இருக்கு, எனக்கு பிடித்திருக்கிறது என்றால் கூப்பிட்டு பாராட்டினால், இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா என்று கேட்கிறார்கள். நல்லது பண்றதுக்கு நான் ஏன் யோசிக்கணும். கோட் படத்திற்கு பிறகு நிறைய பேர் என்னை, குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் சொல்லி விமர்சித்து இருந்தார்கள். அதெல்லாம் கிடையாது. என்னைக்குமே அண்ணன் அண்ணன் தான், தம்பி தம்பி தான். நான் அடுத்த தளபதியாக ஆக வேண்டும் என்று நினைத்திருந்தால் விஜய் சார் என்னிடம் துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார். மேலும், நான் ஏ ஆர் முருகதாஸ் சார் தயாரிப்பில் மான் கராத்தே என்ற படத்தில் நடித்தேன்.

கேரியர் பற்றி சொன்னது:
அந்த படத்தோட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முருகதாஸ் மற்றும் இயக்குனர் சங்கர் சார் வந்திருந்தார்கள். அப்போது நான், ஒருநாள் நான் முருகதாஸ் மற்றும் சங்கர் சார் இயக்கத்தில் நடிக்கணும். அதற்காக என்னுடைய திறமையையும் வியாபாரத்தையும் நிச்சயமாக வளர்த்துக்குவேன் என்று சொன்னேன். அப்ப ரெண்டு படம் வந்த உடனே உனக்கு முருகதாஸ் படம் கேக்குதான்னு பலபேரு கிண்டல் செய்தார்கள். ஆனால், அன்னைக்கு நம்பிக்கை மட்டும் தான் என்னிடம் இருந்தது. நீங்க கைதட்டி கொண்டு இருந்தீங்க, நான் ஓடிக்கொண்டே இருந்தேன். இன்னைக்கு நான் ஆசைப்பட்டபடி முருகதாஸ் இயக்கத்தில் மதராசி படத்தில் நான் ஹீரோவாக நடித்து இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






