தன்னை நம்பி தனுஷ் படம் எடுத்ததற்கு காரணம் இதுதான் என்று சிவகார்த்திகேயன் அளித்திருந்த பேட்டி வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், சிங்கர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவி தான் அயலான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதோடு இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் தெலுங்கு படம்:
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி:
இந்த நிலையில் தனுஷ் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் அளித்து இருந்த பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தனுஷ் என்னை நம்பி படம் எடுத்ததற்கு காரணம் அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை தான். அந்தப் படத்தை எடுக்கும் போது அவரே வெற்றிமாறன் சாரிடம் உங்களிடம் இருக்கும் அசிஸ்டன்ட் இயக்குனர்களிடம் கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு, கதை தேர்வு செய்து, படத்திற்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். பின் அவர் தன்னுடைய பட வேலைக்கு சென்று விட்டார். அதோடு படம் எடுக்க பணத்தை இவ்வளவு போட்டிருக்கிறமோ என்று கொஞ்சம் கூட அவர் கலவை படவில்லை.
https://twitter.com/Its_Vaathi/status/1554391426951065600?t=-P_zbe6IfgY2H7RMGpWGSA&s=08
தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன் சொன்னது:
அதோடு படம் சரியாக போய்க்கொண்டிருக்கிறதா? என்று கூட அவர் நடுவில் வந்து எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. படம் உருவான பிறகு வந்து படத்த பார்த்துவிட்டு எனக்கு போன் பண்ணி சிவகார்த்திகேயன் படம் நன்றாக வந்திருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள் என்று கூறியிருந்தார். நான் இந்தப் படத்தின் மீது வைத்த நம்பிக்கையை விட தனுஷ் என் மீது வைத்திருந்த நம்பிக்கை தான் அதிகம். அவர் வைத்த நம்பிக்கையினால் தான் படம் வெற்றி அடைந்தது என்று கூறியிருக்கிறார்.





