டாக்டர், டான் என்று Skவின் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆனதற்கு காரணமாக இருந்த போட்டோ ஷூட் இதான்.

0
596
priyanka
- Advertisement -

நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்திருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் டாக்டர். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருப்பது படத்திற்கு பக்கபலமாக இருந்து. இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் பிரியங்கா கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டார் என்று சொல்லலாம். இந்த படத்தில் இவருடைய நடிப்பும், அழகும் இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டது. இவர் “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே பிரியங்கா மோகன் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் டாக்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் பிரியங்கா மோகனும், சிவகார்த்திகேயனின் பிரபல சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்கள். அதில் டாக்டர் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு குறித்து பிரியங்கா பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் தான்.

ட்விட்டரில் பி.சி. சார் என்னுடைய போட்டோவை போட்டு இருந்தார். அதை பார்த்து தான் சிவா இயக்குனரிடம் சொன்னார். அப்போது நான் தெலுங்கு பட சூட்டிங்கில் இருந்தேன் அதற்கு பிறகு நெல்சன் சாரிடம் பேசி அப்படி வந்தது தான் டாக்டர் படம் என்று கூறியிருந்தார். இப்படி ப்ரியங்கா பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், பிரியங்கா அவர்கள் டாக்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் டான் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement