நெல் ஜெயராமன் மகனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்திருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் தற்போது கோடிகளில் சம்பளம் ஆகும் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும், இவர் சினிமாவை தாண்டி தன்னால் முடிந்த உதவிகளையும் மக்களுக்கு செய்து கொண்டு வருகிறார். அதிலும் இவர் பல மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் நெல் ஜெயராமன் மகனுக்கு சிவகார்த்திகேயன் செய்திருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் முக்கிய பங்கு ஆற்றிருந்தவர் நெல் ஜெயராமன். இவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
நெல் ஜெயராமன் குறித்த தகவல்:
இவர் விவசாயத்திற்காக போராட்டம் எல்லாம் செய்திருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு பிறகு அவருடைய மகன் சீனிவாசனுடைய படிப்பு செலவுகளை சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார். அன்று சொன்னதை இப்போது வரையும் சிவகார்த்திகேயன் கடைபிடித்து வருகிறார். தற்போது சீனிவாசன் கல்லூரி முதலாம் ஆண்டு சேர இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் செய்த உதவி:
இவருக்கான கல்லூரி செலவுகளை சிவகார்த்திகேயன் செய்து இருக்கிறார். இந்நிலையில் நெல் ஜெயராமனின் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் செய்திருக்கும் உதவிகள் தொடர்பாக இயக்குனர் இரா. சரவணன் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள்.
அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி… pic.twitter.com/9BYaUuXx6K
— இரா.சரவணன் (@erasaravanan) June 18, 2025
இயக்குனர் சரவணன் பதிவு:
அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார். இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவா.
சிவா பற்றி சொன்னது:
நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் சிவகார்த்திகேயன். அப்பலோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடிவந்து, நெல் ஜெயராமனின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நானிருக்கிறேன் அண்ணன்’ என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி, அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.






