வேறு நடிகருக்கான மீண்டும் பாடகராக மாறியுள்ள எஸ் கே.! வெளியான வீடியோ.!

0
491
Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் ஆச்சர்யத்தக்க ஒன்றாகும். தொலைக்காட்சியில் மேடை காமெடியனாக இருந்து அதன் பின்னர் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்ந்து வருகிறார்.

Image result for thumbaa movie

நடிகராக மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் திகழ்ந்து வருகிறார் சிவா. சமீபத்தில் தனது நண்பர் அருண் ராஜாவிற்காக ‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார். மேலும், இந்த படத்தில் தனது மகளுடன் சேர்ந்து ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலையும் பாடி இருந்தார்.

இதையும் படியுங்க : 11 வருடத்திற்க்கு பின்னர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ராஜு சுந்தரம்.! ஹீரோ இவர் தான்.! 

- Advertisement -

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் தர்ஷன் என்ற புதுமுக நடிகரும் நடித்திருந்தார். தற்போது தர்ஷன் நடித்துள்ள புதிய படத்தில் மீண்டும் ஒரு பாடலை பாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.

நடிகர் தர்ஷன் தற்போது ‘தும்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஹரிஷ் ராம் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படம் குழந்தைகளை கவரும் வகையில் வைல்ட் அட்வஞ்சர் படமாக உருவாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவ கார்த்திகேயன் ‘ஹம்டி டம்டி ‘ என்ற பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடலின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இந்த படம் வரும் ஜூன் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Advertisement