குடும்ப சூழ்நிலை காரணமாக அப்படி ஆகிடிச்சி – அகரம் விழாவில் நடிகர் சிவகுமார் வேதனை

0
1716
Sivakumar
- Advertisement -

குடும்ப சூழ்நிலை குறித்து நிகழ்ச்சியில் சிவகுமார் கூறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து சூர்யா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் சினிமா உலகில் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகிறார். விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத நிலையில் வாழ்க்கையில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி போன்ற பல நற்பணிகளை செய்து கொண்டு வருகிறார். இதை எல்லாம் இவர் அகரம் அறக்கட்டளையின் மூலம் செய்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம் அறக்கட்டளை.

- Advertisement -

அகரம் அறக்கட்டளை :

தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம். அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நிறுவனர் நடிகர் சூர்யா, சிவகுமார் ஆவார். இதற்கு சினிமா பிரபலங்கள் சார்பாகவும், அரசியல் சார்பாகவும் பலர் இந்த அகரம் அறக்கட்டளைக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இதை ஏற்கனவே நடிகர் சிவக்குமார் அவர்கள் பல வருடங்களாக செய்த நிலையில் நடிகர் சூர்யாவும் இதை எடுத்து செய்து வருகிறார்.

44 வது சிவகுமார் கல்வி விருதுகள் :

சமுதாயத்தின் பின் தங்கி உள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களை தேடி அவர்களுக்கான நிதி உதவி வழங்க பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. இதில் பல பேர் தற்போது நல்ல வேலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக 44 வது சிவகுமார் கல்வி விருதுகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த அறக்கட்டளை தொடங்கி 44 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் சிவகுமார் சொன்னது:

இதை கொண்டாடும் விதமாக சிவக்குமார் அவர்கள் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நிறைவு விழா நடந்து இருக்கிறது. இந்த விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கி இருக்கிறார்கள். இந்த விழாவில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி கலந்து கொண்டிருந்தார்கள். பின்னர் மேடையில் சிவகார்த்திகேயன் சிவகுமார் கூறியது, நான் 192 படங்களில் நடித்திருக்கிறேன். கடந்த 40 ஆண்டுகளில் 40 கோடி பிரேம்ஸ் வைத்து படம் பிடித்து இருக்கிறேன். ஆனால், என்னுடைய சிறு வயதில் ஐந்து ரூபாய் கொடுத்த புகைப்படம் எடுக்க முடியாதே நிலை இருந்தது.

கல்வி குறித்து சொன்னது:

மேலும், ஒருவருடைய வாழ்க்கையின் இரண்டாவது சுற்று அவர்களுடைய மகன், மகள்களின் வாழ்க்கையை பொருத்து அமையும். பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும். இந்தி சூழலில் கல்விக்கு செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், பொருளாதார நிலையை காரணம் காட்டி கல்வி கற்பதை தவிர்த்து விடக்கூடாது. நான் பள்ளிப் பயிலும் காலத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக சக மாணவருடன் குழு புகைப்படம் எடுக்க முடியாமல் போனது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement