இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ள தல – தளபதி படங்கள். யாருக்கு எத்தனை வெற்றி, எத்தனை தோல்வி.

0
5355
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் இடம் பெரும். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் இவர்களுடைய ரசிகர்களும் மோதலிலேயே இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த இரண்டு முன்னணி நட்சத்திரங்களும் தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். அதனால் இவர்களுடைய படங்கள் ஒரே நாளில் வெளியிடுவது பல பிரச்சனைகள் வரும். அதிலும் இவர்கள் நடிப்பில் வெளிவந்த சில படங்கள் ஒரே தேதியில் வெளிவந்துள்ளன.

-விளம்பரம்-

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியிடுவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விஜய் மற்றும் அஜீத் ஆகிய இவர்களின் படம் ஒரே நாளில் திரைக்கு வந்தால் ரசிகர்கள் மத்தியில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவுக்கு மோதலும் இருக்கும். அது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபீஸில் யாருடைய படம் இருக்கும் என்று பல கருத்துக்கள் போகும். அந்த வகையில் இவர்கள் இருவர் நடிப்பில் ஒரே நாளில் 6 படங்கள் வெளிவந்து உள்ளன. அதை இங்கு பார்க்கலாம்.

இதையும் பாருங்க : ‘தலைவன் பயங்கரமான WWE fan போல’ – மகனுக்கு 90ஸ் புகழ் WWE வீரரின் பெயரை வைத்துள்ள சாண்டி.

- Advertisement -

1.பூவே உனக்காக- கல்லூரி வாசல் :

முதல் முதலாக அஜித் மற்றும் விஜய் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ஒரே வாரத்தில் வெளிவந்த படம் தான் பூவே உனக்காக, கல்லூரி வாசல். இதில் விஜய் நடிப்பில் வெளிவந்த பூவே உனக்காக படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த படம் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்தது. அஜித் நடித்த கல்லூரி வாசல் படம் அந்த அளவிற்கு பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. இந்த படத்தில் பிரசாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
  1. குஷி- உன்னை கொடு என்னை தருவேன்:

    இந்த இரு படங்களும் 2000 ஆண்டு வெளிவந்தது. குஷி படத்தில் விஜய், ஜோதிகா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். அதேபோல் அஜித் நடித்த உன்னை கொடு என்னை தருவேன் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. பாக்ஸ் ஆஃபீசில் மொத்தத்தையும் குசியே தட்டி சென்றது என்றே சொல்லலாம்.
  1. பிரண்ட்ஸ்– தீனா:

    இந்த இரண்டு படங்களும் 2001ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கிற்கு வெளியிடப்பட்டது. விஜய் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஸ் படம் மலையாள படத்தின் ரீமேக். அதே சமயம் அஜித் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் தீனா. இதுவரை காதல் மன்னனாக திகழ்ந்த அஜித்திற்கு தீனா படம் ஒரு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக அமைந்தது. இந்த இரண்டு படமுமே மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்தது.

4.பகவதி– வில்லன்:

இந்த இரண்டு படமும் தீபாவளி அன்று ஒரே நாளில் வெளியிடப்பட்டது. விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதை. இதில் விஜய் பெரிய தாதா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதை விஜய் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. வில்லன் படத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது என்று சொல்லலாம்.

  1. 5. போக்கிரி– ஆழ்வார்:

    இந்த படம் 2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ரேட்டிங்கையும் பெற்றிருந்தது. அதேசமயம் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட வில்லை. இந்த படம் தோல்வியில் தான் முடிந்தது.

6.ஜில்லா– வீரம்:

ஏழு வருடங்களுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜில்லா, வீரம் படம் ஒரே நாளில் வெளியாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த படம் பிக் பாக்ஸ் ஆபிஸில் நல்ல இடம் பிடித்தது என்று சொல்லலாம். அதேசமயம் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜில்லா படம் வெற்றி அடைந்தது என்றாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒரே நாளில் விஜய், அஜித் நடித்திருக்கும் படம் வெளியாக உள்ளதாக தகவல் வந்து உள்ளது. தற்போது விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் பீஸ்ட். அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் வலிமை. இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறனர். பாக்ஸ் ஆபீஸில் எந்த படம் முதல் இடத்தை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

Advertisement