எனக்கே தெரியமா பண்ணுவீங்களா ? போனி கபூருக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் எஸ்.ஜே.சூர்யா

0
762
sjsurya
- Advertisement -

எஸ் ஜே சூர்யா மீண்டும் போனிகபூர் உடன் மோத இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் நடிகராகவதற்கு முன்பு மிகப்பிரபலமான இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய படங்களின் மூலம் பல முன்னணி நடிகர்களின் வாழ்க்கையே உச்சத்திற்கு மாறியது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

அந்த வகையில் இயக்குனர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் வாலி. இந்த படத்தில் அஜித், சிம்ரன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஒரு வேடத்தில் அஜித் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார். இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் அஜீத்தின் திரையுலக பயணத்தில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : எனக்கு கொரோனாலாம் இல்ல, நான் வெளிய வந்த காரணமே இதான் – முதல் முறையாக மனம் திறந்த நமீதா.

- Advertisement -

இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையில் வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை வாலி படத்தின் தயாரிப்பாளர் எஸ். எஸ். சக்கரவர்த்தி நிக் ஆர்ட்ஸ் இடம் இருந்து தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார். ஆனால், வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கு தன்னுடைய அனுமதி வேண்டும் என்றும், படத்தை ரீமேக் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் எஸ் ஜே சூர்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக வழக்கில் உயர்நீதிமன்றம் போனி கபூருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில் எஸ் ஜே சூர்யா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வந்த ஆரண்ய காண்டம் படத் தயாரிப்பாளர்கள் மீது அப்படத்தின் இயக்குனர் தியாகராஜ குமாரராஜா தாக்கல் செய்திருந்தார்கள். அப்போது படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் அதன் ரீமேக் உரிமையை எழுதியவருக்கு இருக்கிறது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இதை அடிப்படையாக வைத்துத் தான் எஸ் ஜே சூர்யா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதோடு எஸ் ஜே சூர்யா குஷி படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்து செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement