எனக்கு கொரோனாலாம் இல்ல, நான் வெளிய வந்த காரணமே இதான் – முதல் முறையாக மனம் திறந்த நமீதா.

0
647
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. பல மாற்றங்களுடன் இந்த நிகழ்ச்சி 54 நாட்களை கடந்து இருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வீட்டுக்குள் போட்டிகளும், போட்டியாளர்களுக்குள் வன்மமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல் வாரம் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இதுவரை தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சீசனில் திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இவர் நிகழ்ச்சியில் நுழைந்த இரண்டு மூன்று நாட்களிலேயே தவிர்க்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு என்ன காரணம் என்று பலரும் பலவிதமாக கேள்விகளையும் சர்ச்சைகளையும் எழுப்பி இருந்தார்கள். இந்நிலையில் நமிதா மாரிமுத்து சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்ததற்கான காரணத்தை கூறி இருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பது, நான் ரொம்ப சாமி நம்பிக்கை உடையவள்.

இதையும் பாருங்க : ‘இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு போய்யிடனும்’ அப்பா படத்தில் வந்த குட்டிப் பையனா இது ?

- Advertisement -

அது என்னுடன் இருந்தவர்களுக்கு நன்றாக தெரியும். நான் எப்போதும் செவ்வாய், வியாழன்,வெள்ளி நாட்களில் விரதம் இருப்பேன். அதே மாதிரி பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் நான் விரதம் இருந்தேன். அப்போது வெள்ளிக்கிழமை நான் என்னையறியாமல் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். பின் நான் ஹாஸ்பிட்டலில் இருந்தேன். அப்பதான் நான் வெளியே வந்ததே எனக்கு தெரியும். மருத்துவர்கள் டிஹைட்ரஜன் ஆனது அதனால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று சொன்னார்கள்.

வீடியோவில் 16 நிமிடத்தில் பார்க்கவும்

ஆனால், சோசியல் மீடியாவில் நிறைய வதந்தி வந்தது. எவ்ளோ பெரிய ரியாலிட்டி ஷோ நடக்கும் போது எல்லாம் நல்லா கவனமாக செய்வார்கள். என்னை கூட இரண்டு மூன்று முறை கோவிட் டெஸ்ட் பண்ணி தான் உள்ளே அனுமதித்தார்கள். தயவு செய்து பொய்யான விஷயத்தை எல்லாம் மக்கள் மத்தியில் பரப்பாதீர்கள். அதேபோல் நான் 18 வயசு ஆன உடனே வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். பின் நான் பெங்களூரில் ட்ரான்ஸ் ஜெண்டர் ஆப்ரேஷன் செய்து கொண்டேன். அது மறுஜென்மம் எடுத்த மாதிரி இருந்தது. அப்ப நான் ரொம்ப குண்டாக இருந்தேன். கால் மரத்துப் போக வேண்டும் என்று முதுகில் ஊசி போடுவார்கள் போடுவார்கள்.

-விளம்பரம்-

ஆனால், எனக்கு ஊசி இறங்கவில்லை. பின் 16 முறை ஊசி போட்டார்கள். பின் ஆப்ரேஷன் முடிந்த உடனே கிளம்பி விடணும். ஏன்னா, ட்ரான்ஸ் ஜெண்டர் ஆப்ரேஷன் பன்னவர்களுக்கு அங்க தங்கி ஓய்வு எடுக்க முடியாது. அதனால் சர்ஜரி பண்ண வலி வேதனை விட அங்கிருந்து கிளம்பி வர வலி தான் அதிகம். பின் 12 நாட்கள் யூரின் டூப் போட்டு இருக்கனும். அது ரொம்ப நரக வேதனை. பின் 40 நாள்கள் கழித்துதான் முழுமையாக பெண்ணாக மாறமுடியும். அதனால் அந்த வலி எல்லாம் மறைந்து விடும் என்று கூறினார்.

Advertisement