SAC என்னிடம் 15 லட்சம் ஏமாற்றிவிட்டார்’ கதறும் விஜயகாந்தின் உதவியாளர்

0
424
- Advertisement -

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் என்னிடம் 15 லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டார் என்று விஜயகாந்தின் உதவியாளர் கதறி அழுந்து அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். அதோடு இவர் தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான தளபதி விஜயின் தந்தை ஆவார்.

-விளம்பரம்-
sac

தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்று தொடரிலும் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று விஜயகாந்தின் முன்னாள் உதவியாளர் கண்ணீர் மல்க அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

விஜயகாந்தின் முன்னாள் உதவியாளர் அளித்த பேட்டி:

அதாவது, விஜயகாந்தின் முன்னாள் உதவியாளராக இருந்தவர் எஸ் கே சுப்பையா. இவர் சென்னையில் பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், 1981 ஆம் ஆண்டிலிருந்து நான் விஜயகாந்த்திற்கு உதவியாளராக இருந்தேன். பின்னர் கேப்டன் பிரபாகரன் படத்தில் இருந்து என்னை அவர் ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆக்கினார். அப்போதுதான் எனக்கும் எஸ் ஏ சந்திரசேகருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது.

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த பெரியண்ணா படத்தை நான் தயாரித்தேன். இந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் வரும் பணத்தை வைத்துக்கொண்டு தான் நான் வீட்டையும், மூன்று பெண் குழந்தைகளுக்கான டெபாசிட் பணத்தையும் போட்டு விட வேண்டும் என்று எஸ் ஏ சியிடம் விஜயகாந்த் சொல்லி இருந்தார். இதனால் பெரியண்ணா படம் எடுக்கும்போது ஏழு லட்சம் சம்பளமாக எஸ்ஏசி வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின் அவர் 20 லட்சம் ஆக உயர்த்தி கொண்டார். மேலும், அதிகமாக அவர் பணத்தை கேட்டார். அதற்கும் நான் ஒப்புக்கொண்டேன். 1999 ஆம் ஆண்டு ஏபிசி பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தில் என்னுடைய பணம் டெபாசிட் செய்வதாக எஸ் ஏ சி என்னிடம் கூறினார். அதோடு பிரைவேட் கம்பெனி சோபாவின் சொந்த பெரியப்பா பையன்னு தான் என்றும், அதில் முதலீடு செய்தால் தான் கேரண்டி என்றும் கூறினார். அதனால் நாங்கள் இருவரும் ஜாயிண்ட் அக்கவுண்டில் கையெழுத்து போட்டு 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்த முதல் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுத்தார்கள்.

பின்னர் அடுத்த மாதம் 15,000 ஆக வட்டியை குறைத்தார்கள். இதனால் எனக்கு பயம் ஏற்பட்டு பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அந்த பணத்தை தரவில்லை. அதோடு சங்கிலி முருகன், விக்ராந்தின் அப்பா சிவா, நடிகர் விவேக் என பலரும் எஸ் ஏ சியிடும் பணம் குடுத்து ஏமாந்து விட்டார்கள். அதோடு என்னுடைய பொண்ணுக்கு கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடந்து. இதனால் தொடர்ந்து அவரிடம் நான் பணம் கேட்டு வருகிறேன். ஆனால், அவர் பணம் திருப்பி தராமல் ஏமாற்றிக் கொண்டே வருகிறார். இதனால் தான் நான் பத்திரிகையாளர்களை சந்தித்தேன். மேலும், என்னுடைய மகளின் திருமண பத்திரிக்கை கொண்டு எஸ்ஏசி இடம் கொடுக்கும் போது வாட்ச்மேன் உள்ளே விட மறுத்துவிட்டார். இது எனக்கு ரொம்ப மன வேதனை அளிதத்து என்று கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்.

Advertisement