நடிகை சமந்தா பண்ணை வீட்டில் சடலமாக கிடந்த நபர் இவர் தானாம்.! விசாரணையில் அம்பலம்.!

0
26942
samantha
- Advertisement -

சினிமா உலகில் ஒரு குடும்பத்தில் ஒருத்தர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலே அதிசயம். அதுவும் நாகர்ஜுனா குடும்பத்தில் உள்ள அனைவருமே சூப்பர் ஸ்டார்கள் தான்.இப்படி சினிமா துறையில் பேரும் புகழுடன் கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கும் நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு நடந்த சோகம். நடிகர் நாகார்ஜுனா,அவரது மனைவி அமலா,மகன் நாகசைதன்யா ,அவரது மனைவி சமந்தா ஆகியோருக்கு சொந்தமான பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் 40 ஏக்கர் விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலம் நாகர்ஜுனா குடும்பத்தினர் அனைவருக்கும் சொந்தமான நிலமாகவும்,மேலும், இது ஒரு விவசாய நிலமும் என்று கூறப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Image result for dead body found in nagarjuna

இந்த விவசாய நிலத்தில் நாகர்ஜுனா குடும்பத்தினர் எந்த ஒரு விவசாயமும் செய்யவில்லை என்று தெரியவருகிறது. இதனால் அவர்கள் சொந்த நிலத்திற்கு அடிக்கடி போகமாட்டார்கள். அந்தவகையில் அமலா மட்டும் செப்டம்பர் மாதம் மட்டும் ஒருமுறை போய் பார்த்துட்டு வந்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படி நடிகை சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ஆந்திரா போலீசார் நேற்று கண்டெடுத்தனர் இந்தச் செய்தி ஆந்திரா திரை உலகத்தையே புரட்டி போடும் அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் வரல.! இந்த படத்துக்கு மட்டும் போறாரா நயன்.!

- Advertisement -

ஹைதராபாத் அருகே உள்ள கேசம் பேட்டை சார்ந்த போலீசார், பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் நடிகர் நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்தது நேற்று இரவு திடீரென்று துர்நாற்றம் வீசியது என்று அருகிலுள்ள விவசாயிகள் நாகர்ஜுனாவின் நிலத்திற்கு சென்றனர். அங்கு சென்று பார்த்தால் மிகவும் ரொம்ப மோசமான நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பதை பார்த்தார்கள். உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்து கொண்டு இருக்கிறது.இதனைத்தொடர்ந்து இன்று காலை கேசம்பேட் காவல் நிலையம் அதிகாரிகள் நாகர்ஜுனாவின் நிலத்திற்கு மோப்ப நாய்களுடன் சென்று தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் யார் என்று தெரியவந்துள்ளது. பாப்பிரெட்டிகுடா பகுதியைச் சேர்ந்த சக்காளி குண்டு(30) என்பவர் என்றும், இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சில ஆண்டுகள் ஆகி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.மேலும், தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி விட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என அவரது பெற்றோர்கள் விசாரணையில் கூறியுள்ளனர் இருப்பினும் போலீசார் அந்த சடலத்தை பற்றிய விசாரணையை தீவிரபடுத்தியுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement