உன்னை என் துணையாக பெற்றதற்கு – 11 ஆம் ஆண்டு திருமண நாளில் பிரசன்னா போட்ட உருக்கமான பதிவு

0
1010
- Advertisement -

திருமணமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிரசன்னா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பாக்யராஜ்-பூர்ணிமா, ரஜினி – லதா, அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா- பிரசன்னா ஜோடி.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா.இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு.

- Advertisement -

ஸ்னேகா – பிரசன்னா ஜோடி :

அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும்.தற்போது இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். அதே போல தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. பின்னர் தமிழில் மிரட்டலான வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்து இருக்கிறார்.

காதல் To கல்யாணம் :

சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் இணைந்தார். இந்த படத்தின் போது தான் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. மேலும், 2011ம் ஆண்டு தான் பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி இருந்தார்.அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

-விளம்பரம்-

11 ஆம் ஆண்டு திருமண நாள் :

இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான மகன் மற்றும் ஆத்யந்தா என்ற ஒரு அழகான மகளும் இருக்கிறார்கள். இப்படி கடந்த 11 வருடங்களுக்கும் மேலாக இருவரும் ஒற்றுமையாக சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று தங்களது திருமண நாளை முன்னிட்டு பதிவு ஒன்றை போட்டு இருக்கும் பிரசன்னா ‘ ஏய் பொண்டாட்டி இந்த சிறப்பு நாளில் நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும், உன் கையை பிடித்துக் கொண்டு சென்ற நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

நன்றி உடையவனாக இருக்கிறேன் :

உன்னுடைய அன்பு என்னை வழி நடத்தியது, எனக்கு ஏற்பட்ட இருள் அனைத்தையும் விரட்டும் ஒளி நீயாகும். உன்னை என் துணையாக பெற்றதற்கு நான் மிகவும் நன்றி உடையவனாக இருக்கிறேன், நம் குழந்தைகள் விலை மதிப்புள்ள பரிசுகள், கடவுளின் ஆசிர்வாதத்தால் உன்னுடைய அன்பால் உன்னுடைய புன்னகையால் என் உலகத்தை நீ அற்புதமாக வைத்திருக்கிறாய்’ என்று உருக்கமுடன் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement