அவர் தப்பு பண்ணிட்டு வந்திருந்தால் கூட அவருடைய திறமையை ரசித்தோம் – லாரன்ஸ் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
585
- Advertisement -

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி லாரன்ஸ் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் லாரன்ஸ். இந்த நிகழ்ச்சியில் இவர் ‘மேடம் ஆக்சன் மேடம்’, இவனை விடுங்க அப்படியே சில்லு சில்லுன்னு நடப்பான் என்று பேசிய வார்த்தை தான் ஹைலைட். பின் ‘லாரன்ஸ் தத்துவங்கள்’ என்று இவரது பேச்சுகளை கட் செய்து வைரலாக்கி வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு லாரன்ஸ் குறித்து தற்போது சோசியல் மீடியாவில் ட்ரென்ட்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்து பலருமே லாரன்ஸ் என்ன செய்கிறார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் youtuber ஒருவர் லாரன்ஸ் தேடி அவர் வேலை செய்த கோயம்பேட்டில் உள்ள ஒரு காய்கறி மண்டிக்கு சென்று இருக்கிறார். இவர் அங்கு மூட்டை தூக்கும் வேலை செய்து இருக்கிறார். இதனால் அந்த யூடியூபர் அங்கு தேடி சென்றிருக்கிறார். அங்கு போய் விசாரித்ததில் பலரும், இவருடைய உண்மையான பெயர் லாரன்ஸ் கிடையாது விருமாண்டி. அதற்குப் பிறகுதான் லாரன்ஸ் என்று மாட்டிக் கொண்டார். இவருக்கு கல்யாணம் எல்லாம் ஆகி குடும்பத்துடன் தான் வாழ்ந்து இருந்தார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பிறகும் இவர் இங்கு வேலை செய்து கொண்டிருந்தார். கொரோனாவுக்கு பிறகு அவரை நாங்கள் பார்க்கவே இல்லை. எங்கு சென்றார் என்று கூட தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? எங்களுக்கு தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி:

இந்த நிலையில் லாரன்ஸ் குறித்து ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி நடத்திய இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டியில் கூறியது, எத்தனை எத்தனையோ குற்றவாளிகளை உட்கார வைத்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலமாக பேசியிருக்கிறேன். படித்தவர்களை விட படிக்காதவர்களிடம் தான் நிறைய திறமை இருக்கு. ஹியூமர் சென்சும் இருக்கு. சில பேர் நான்கு கொலைகளை செய்து விட்டு வந்து என் இதயத்தில் உட்கார்ந்து எதார்த்தமாக பேசுவார்கள். அவர்களிடமும் ஹுயூமர் சென்சும் இருக்கும். ஒருத்தவர்களை ஒரு கோணத்தில் மட்டுமே காண்பிக்காமல், அவர்களுடன் மற்றொரு குணத்தையும் வெளிப்படுத்துவோம்.

நிகழ்ச்சி குறித்து சொன்னது:

அதோட வெளிப்பாடு தான் லாரன்ஸ் மாதிரியான ஆட்கள். ஒவ்வொரு எபிசோடையும் நீங்க எடுத்து பார்த்தாலும் இந்த மாதிரியான திறமையானவர்களை நீங்கள் பார்க்கலாம். அன்றைக்கு நிகழ்ச்சிக்கு லாரன்ஸ் வந்தது இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது. அவருக்குள்ள அப்படி ஒரு காமெடி சென்ஸ். அதனால் தான் அவர் பேசின போதும் ஆக்சன் பண்ணின போதும் அமைதியாக இருந்தோம். அந்த திறமையும் மக்களுக்கு தெரியணும் தான் அப்படியே ஒளிபரப்பினோம். நாங்கள் நினைத்திருந்தால் எடிட் பண்ணி இருக்கலாம் இல்லையா? ஆனால், அப்படி செய்யவில்லை. அவர் தப்பு பண்ணிட்டு வந்திருந்தால் கூட அவருடைய திறமையை ரசித்தோம்.

-விளம்பரம்-

லாரன்ஸ் திறமை:

அதே நேரத்தில் அவருடைய தப்பையும் நியாயப்படுத்தவில்லை. அவருக்கு சப்போர்ட்டும் பண்ண வில்லை. லாரன்ஸுக்கு இருக்கிற திறமைக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருந்தால் ஒரு பெரிய காமெடியனாக வந்திருப்பார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் வெறும் சோ மற்றும் பன்னிட்டு அப்படியே அனுப்பப்படுவதில்லை. அவர்களுடைய தேவைகளையும் வறுமையும் போக்க உதவி செய்து கொடுத்திருக்கிறோம். குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண்கள் பல பேருக்கு எங்களால் முடிந்த சுய தொழிலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். ஆனால், லாரன்ஸ்க்கு எங்களோட பண உதவி தேவைப்படவில்லை.

லாரன்ஸ் குறித்து சொன்னது:

அவர் திருந்தி குடும்பத்தோடு வாழ ஆலோசனை மட்டும் தேவைப்பட்டது. பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து அனுப்பியதில் எங்களுக்கு ஒரு ஆறுதல் இருந்தது. நாங்கள் அப்படி செய்யவில்லை என்றால் லாரன்ஸ் கண்ணனையோ அல்லது கண்ணன் லாரன்சையோ ஏதாவது செய்திருப்பார். உயிருக்கு ஆபத்தா முடிந்திருக்கும். நாங்கள் இரண்டு பேரையும் அழைத்து எதிர்காலத்தில் நடக்க இருந்த ஆபத்தை தடுத்திருக்கிறோம். இரண்டு குடும்பங்கள் மன நிம்மதியோடு வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். அதற்கு மேல் அவர்களுக்கு எந்த உதவியும் தேவைப்படவில்லை என்பதால் லாரன்ஸ் எங்களுடன் தொடர்பில்லை. அவர் இப்போ என்ன பண்றாரு? எங்க இருக்கிறார்? என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement