பக்கத்து வீட்டின் நபர் கார் தீ பிடித்து எரிந்தது தொடர்பாக கீர்த்தி பாண்டியன் பதிவிட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது புதுப்புது வாகனங்களை அறிமுகம் செய்கிறார்கள். அந்த வகையில் எலக்ட்ரானிக் டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் அதிகமாக விற்பனைக்கு வந்திருக்கிறது.
இதை புது புது மாடல்களில் எலக்ட்ரானிக் வாகனங்கள் விற்கப்படுவதால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இருந்தாலும், இந்த வாகனங்களால் சில சமயங்களில் எதிர்பாராத வகையில் விபத்துகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் எம் ஜி நிறுவனத்தை சேர்ந்த சொகுசு கார் ஒன்றை நடிகை கீர்த்தி பாண்டியன் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் சரவணகுமார் என்பவர் வாங்கி இருக்கிறார். திடீரென்று அவருடைய கார் தீ பிடித்து எறிந்து இருக்கிறது.
இந்த நிலையில் இதுகுறித்து சரவணகுமார் பதிவில் கூறியிருப்பது, நான் mg zs ev கார் ஒன்றை கடந்த ஆறு வாரங்களுக்கு முன்பு தான் வாங்கினேன். அதன் விலை 26.61 லட்சம் ஆகும். இந்த காரை என்னுடைய வீட்டின் முன்பு உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி இருந்தேன். எதிர்பாராத விதமாக திடீரென்று கார் தீப்பிடித்து எறிந்தது. இதனை பார்த்த என்னுடைய அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், என்னுடைய குடும்பத்தினரும் காவல்துறைக்கும், தீயணைப்புக்கும் தகவல் கொடுத்திருந்தார்கள்.
அதன் பின் 30 நிமிடத்திலேயே வந்து தீயணைத்தார்கள். மேலும், இது குறித்து நான் எம் ஜி நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இது எனக்கு அதிகளவில் மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருந்தது என்று கூறியிருக்கிறார். இவருடைய பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் பதிவு போட்டு இருக்கிறார். அதில், இது என்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் சரவணகுமார் என்பவருடைய கார் .
அவர் வீட்டில் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இருக்கிறார்கள். இந்த எதிர்பாராத விபத்தின் போது வயதானவர்களோ, சிறுவர்களோ பக்கத்தில் இருந்தால் என்ன ஆவது? மிகவும் ஆபத்தான ஒன்று. அவருடைய மின்னஞ்சலுக்கு பதில் சொல்லுங்கள். பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று எம் ஜி நிறுவனத்தை திட்டி உள்ளார். தற்போது இந்த சம்பவம் mg ரக கார் வைத்திருக்கும் நபர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இதனை அடுத்து இவர் அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் தான் கீர்த்தி பாண்டியனுக்கும் நடிகர் அசோக் செல்வனுக்கும் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கண்ணகி.