வெகு சிறப்பாக நடைபெற்ற சீமந்தம்.! புகைப்படங்களை பகிர்ந்த பிக் பாஸ் சுஜா வருணி.!

0
807
Suja

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தமிழில் மிளகா, பென்சில், கிடாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சிவாஜி தேவை திருமணம் செய்து கொண்டார். தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும், நடிகை சுஜா வருணி, சிவாஜி தேவ்வை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணமும் நடைபெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்த சுஜா, திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் அடங்கி குடும்ப பெண்ணாக மாறியுள்ளார்.

திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது சுஜா கற்பமாக இருக்கிறார். அதனை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரே புகைப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது சுஜா கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு சீமந்தம் செய்து அழகு பார்த்துள்ளார் அவரது கணவர்.

இந்த சீமந்த விழாவில் ஆர்த்தி கணேஷ், கணேஷ் வெங்கட் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் அந்த புகைப்படங்களை சுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுஜாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement