யாரு பரணியா ‘கட்டபொம்மன் ஊர் எனக்கு’ பாட்ட அண்ணன் எடுத்துக்கிட்டேன்டா – இணையத்தில் வைரலாகும் பஹத் பாஸில் மீம்ஸ்.

0
2374
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துநடித்திருந்தார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசையமித்திருந்தார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

- Advertisement -

இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார். மேலும், இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் போன்ற பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய எந்த திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த பின்னர் நெட்டிசன்கள் சிலர் வடிவேலு மற்றும் உதயநிதியை பாராட்டுவதை விட இந்த இடத்தில் ஜாதி வெறி பிடித்த ஒரு கதாபாத்திரமாக நடித்த பஹத் பாசிலின் கதாபாத்திரத்தை ஒரு ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதிலும் பஹத்தின் சீன்களை எல்லாம் கட் செய்து அதற்கு எண்ணற்ற ஜாதி பாடல்களை போட்டு சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் இது குறித்து அன்றே திரைப்பட விமர்சகரான ரமேஷ் பாலா பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் மாமன்னன் திரைப்படத்தில் பஹத் பாஸிலின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது.

ஆனால், சில ஜாதி பெருமை கொண்ட இளைஞர்களுக்கு அவருடைய நடிப்பபும் கதாபாத்திரத்தமும் வேறு விதமான தூண்டுதலாக அமைந்துவிடும் என்று கவலையாக இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பகிர்ந்துள்ள திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ‘நீங்கள் சரியாக கணித்து இருக்கிறீர்கள் அண்ணா. அதே விஷயம் தான் தற்போது நடந்துகொண்டு இருக்கிறது.’ என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல இந்த படத்தில் வில்லனாக நடித்த பஹத் பாஸிலின் காட்சிகளை வீடியோவாக தொகுத்து, தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு போடப்பட்ட பாட்டை போட்டு பஹத் பாஸிலை ஹீரோவாக மாற்றிவிட்டனர். இது தொடர்பான பல்வேறு விதமான மீம்கள் வைரலாகி வருகிறது. மாரி செல்வராஜ், பஹத் பாஸில் கதாபாத்திரத்தை வில்லனாக கான்பிக்க நினைத்தார் ஆனால், அந்த கதாபாத்திரத்தை சிலர் ஹீரோவாக மாற்றிவிட்டனர்

Advertisement