மறைமுகமாக எச்சரித்த சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி பதிவிட்ட பதவி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக களமிறங்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார்.
மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இருந்தாலும் 2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
சல்மான் கானின் திரைப்பயணம்:
அப்படியே இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இப்படி சல்மான் கான் பாலிவுட்டில் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்தார் என்று சொல்லலாம். பாலிவுட்டில் திருமணம் செய்யாமல் இருக்கும் ஹீரோ என்று கேட்டால் அனைவரும் சல்மான்கான் உடைய பெயரை தான் சொல்வார்கள். சல்மான்கான் அவர்கள் ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து வந்தார். ஆனால், அந்த காதல் சேரவில்லை என்று தான் சொல்லணும். பிறகு ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
சல்மான் கான் திருமணம் குறித்த சர்ச்சை:
ஆனால், சல்மான்கான் மட்டும் திருமணம் செய்து கொள்ள வில்லை. மேலும், ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு நடிகை கத்ரீனா கைஃப் உட்பட பலருடன் சல்மான்கான் காதலித்து இருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால், எதுவும் உண்மை இல்லை. இருந்தாலும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், சல்மான் கான் காதல் குறித்து சோசியல் மீடியாவில் பல வதந்திகள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சல்மான்கானுடன் 8 வருடத்துக்கு மேலாக காதலில் இருந்தவர் பாலிவுட் நடிகை சோமி அலி. சல்மான் கான் ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.
சல்மானின் முன்னாள் காதலி:
பின் 1990களில் சல்மான் கானுடன் சேர்ந்து இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். 8 வருடமாக காதலித்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுடைய காதலை முறித்துக் கொண்டார்கள். அதற்கு பிறகு சோமி அலி படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது இவர் அமெரிக்காவில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழக்கு நடத்தும் சமூக செயல்பாட்டாளராக இருக்கிறார். அந்த வகையில் அமெரிக்காவில் ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டைன் பாலியல் ரீதியாக பல பெண்களைத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.
சல்மான் கான் குறித்து சோமி அலி பதிவிட்ட பதிவு:
இந்நிலையில் அவரோடு சல்மான்கானை மறைமுகமாக ஒப்பிட்டு சோமி அலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் அவர், பாலிவுட்டின் ஹார்வி வெயின்ஸ்டைன்! உங்கள் முகத்திரை வெளிப்படும். உங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருநாள் வெளியே வந்து உண்மைகளைப் பகிர்வார்கள். ஐஸ்வர்யாராய் பச்சன் போல” என்று பகிர்ந்து அந்தப் பதிவில் ஐஸ்வர்யா ராயையும் டேக் செய்திருக்கிறார். சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் முன்னர் காதலில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சோமி அலி பதிவிட்ட பதிவு சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.