ரசிகர்கள் செய்த செயலால் அதிர்ச்சி ஆன காதலர் தினம் பட நடிகை – அவரே சொன்ன பகிர் தகவல்

0
113
- Advertisement -

தனக்காக ரசிகர்கள் செய்தது குறித்து நடிகை சோனாலி பிந்த்ரே அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிந்தியில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சோனாலி பிந்த்ரே. இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான நடிகையானார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தமிழில் குணால் நடித்த ‘காதலர் தினம்’, நடிகர் அர்ஜுன் நடித்த ‘கண்ணோடு காண்பதெல்லாம் ‘ போன்ற சில படங்களில் நடித்து இருந்தார். அதற்கு பின் இவருக்கு சரியாக தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும், இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர். இப்படி இருக்கும் போது சில வருடங்களுக்கு முன் இவர், தனக்கு புற்றுநோய் இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

- Advertisement -

புற்றுநோயில் சோனாலி பிந்த்ரே:

இதற்காக இவர் நியூயார்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார் . மேலும், நடிகை சோனாலி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி தற்போது பூரணமாக குணம் ஆகி இருக்கிறார். அதே போல முன்பை போல மீண்டும் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கி இருக்கிறார். இது தொடர்பாக இவர் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

சோனாலி பிந்த்ரே பேட்டி:

இதனை கண்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர் சோனாலி பிந்த்ரே இவர்! என்று கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்த நிலையில் நடிகை சோனாலி பிந்த்ரே சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய ரசிகர் செய்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை குறித்து பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், ஒருமுறை நான் போபாலுக்கு சுற்றி பார்க்க சென்றிருந்தேன். அப்போது என்னை சந்திக்க முடியாமல் போனதால் என்னுடைய ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ரசிகர்கள் செய்த வேலை:

இது எனக்கு ரொம்பவே அதிர்ச்சியை கொடுத்தது. அதே போல் எனக்கு மெயிலிலும் ஒரு கடிதம் வந்தது. அதிலிருந்த எழுத்துக்கள் எல்லாம் சிவப்பு நிறத்தில் இருந்தது. அது ரத்தமா? என்று சோதித்துப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இப்படியெல்லாம் செய்வார்களா? எப்படி ஒரு மனிதனை இந்த மாதிரி ஒரு இடத்தில் வைத்து பார்க்க முடிகிறது. இதுபோன்ற ரசிகர்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறியிருந்தார்.

சோனாலி திருமணம் :

சோனாலி இயக்குனர் ரமேஷ் பெர்லின் மகனான திரைப்பட தயாரிப்பாளர் கொல்டி பெஹலை தனது ‘நாராஸ்’ படத்தின் செட்டில் சந்தித்தார். பின் இருவரும் காதலித்தனர். பின்பு 2002 ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தை 2005 ஆம் ஆண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement