ஜீவி ஹீரோ மற்றும் ஷிவானி இணைந்து நடித்துள்ள ‘பம்பர்’ எப்படி? – முழு விமர்சனம் இதோ.

0
2496
- Advertisement -

இயக்குனர் எம். செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பம்பர். இந்த படத்தில் வெற்றி, சிவானி நாராயணன், ஜி.பி.முத்து,தங்கதுரை உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். பம்பர் லாட்டரி விழும் பணத்தை அபகரிக்கும் கும்பலின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இன்று வெளியாகியிருக்கும் பம்பர் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கதாநாயகன் வெற்றி தன்னுடைய நண்பர்கள் மூவருடன் சேர்ந்து தூத்துக்குடியில் திருட்டு வேலை செய்து வருகிறார். இதனால் இவர்களை போலீஸ் தேடுகிறது. இதனால் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள சபரிமலைக்கு வெற்றி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மாலை போடுகிறார். பின் நான்கு பேரும் சபரிமலைக்கு செல்கிறார்கள். அங்கு வயதான முஸ்லிம் நபர் ஒருவர் லாட்டரி சீட்டு விற்கிறார்.

- Advertisement -

அவரிடம் இருந்து 10 கோடி ரூபாய்க்கான பம்பர் லாட்டரி சீட்டினை இவர்கள் நான்கு பேரும் வாங்கிறார்கள். ஆனால், அந்த லாட்டரியை வெற்றி அங்கேயே விட்டு சென்று விடுகிறார். அதை லாட்டரி சீட்டு வித்த நபர் எடுத்து வைத்துக் கொள்கிறார். சில நாட்களில் அந்த லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுகிறது. இது அந்த லாட்டரி சீட்டு விற்கும் நபருக்கு தெரிகிறது. இதை அவர் எடுத்துக் கொள்ளாமல் வெற்றியிடம் கொடுக்க நினைக்கிறார்.

இன்னொரு பக்கம் இந்த 10 கோடியை அனுபவிக்க ஒரு சில கூட்டம் திட்டம் போடுகிறது. இறுதியில் அந்த லாட்டரி சீட்டு விற்கும் நபர் வெற்றியை கண்டுபிடித்தாரா? வெற்றி 10 கோடி ரூபாய் வாங்கினாரா? பணத்தை அடைய நினைக்கும் கும்பல் என்னானது? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் கதாநாயகனாக வரும் வெற்றி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இதுவரை வந்த படங்களை விட இந்த படத்தில் வெற்றியின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது.

-விளம்பரம்-

இவரை அடுத்து கதாநாயகியாக சிவானி நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை அடுத்து லாட்டரி டிக்கெட் விற்கும் நபராக ஹரிஷ் பெராடி வருகிறார். இவர்தான் படம் முழுவதையும் தாங்கி செல்கிறார் என்று சொல்லலாம். இவர் மீது தான் பார்வையாளர்கள் கவனம் ஈர்த்து இருக்கிறது. மேலும், படத்தில் ஜிபி முத்துவின் காமெடிகள் எதுவும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

பின் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருவி மதன் சிறப்பாக நடித்திருக்கிறார். நேர்மை, நியாயம், மனிதநேயம் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் இயக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் கதை மெதுவாக செல்கிறது. இடைவேளைக்கு பிறகு வேகமாக கதை நகர்கிறது. இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை சேர்த்திருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை சேர்த்திருக்கிறது

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

இரண்டாம் பாதி அருமையாக இருக்கிறது

நியாயம் நேர்மை தர்மம் ஆகியவற்றை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருக்கிறார்

குறை:

முதல் பாதி மெதுவாக செல்கிறது

கதைக்களத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் பம்பர்- அதிர்ஷ்டம் அடிக்குமா என்று பார்க்கலாம்

Advertisement