கொரோனா தொடங்கிய காலத்திலிருந்தே சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை சீரியல் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுவாகவே நடிகர்கள் பற்றி ஏதாவது ஒரு தகவல் சோசியல் மீடியாவில் கிடைத்தால் போதும் ரசிகர்கள் அதை பயங்கர ட்ரெண்டிங் ஆகி விடுவார்கள்.
அந்த வகையில் பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் முன்னணி சேனல்களில் ஒன்றாக மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சசிகலா நாகராஜன்.
சசிகலா ஆங்கர்- ஆக்டிங்:
இவர் சென்னையை சேர்ந்தவர். ஆரம்பத்தில் இவர் விஜே வாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் சில சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதன்பின் மூலம் தான் இவருக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான குல தெய்வம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் சசிகலா. முதல் சீரியலிலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவர் நடித்த சீரியல்:
அதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான மிகப்பெரிய ஹிட் கொடுத்த யாரடி நீ மோகினி தொடரிலும் சசிகலா நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் கலைஞர் டிவி, கேப்டன் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று என்றென்றும் புன்னகை. இந்த தொடரில் சசிகலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார்.
சசிகலா திருமணம்:
இதனிடையே இவர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு தான் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு பகிர்ந்திருந்தார். மேலும், கர்ப்பமாக இருந்தும் இவர் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்திருந்தார். பின் சமீபத்தில் தான் இவர் சீரியல் இருந்து பிரேக் எடுப்பதாக தெரிவித்திருந்தார். அதேபோல் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்.
சசிகலாவுக்கு பிறந்த குழந்தை:
தன் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எல்லாம் சசிகலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது சசிகலாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை சசிகலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “yes it’s a girl baby” என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.