பரோட்டாவில் இருந்து பிரியாணிக்கு மாறிய சூரி. அவரோட உதவியாளரை பாருங்க. வீடியோ இதோ.

0
3373
soori
- Advertisement -

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், பல முன்னெச்சரிக்கைகள் உடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. உலகில் உள்ள மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். இந்தியாவில் 1200 கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான்.

-விளம்பரம்-

மேலும், கொரோனா வைரஸை ஒழிக்க அரசாங்கம், காவல்துறை,மருத்துவர்கள் என அனைவரும் தங்கள் உயிரை பணய வைத்து போராடி வருகின்றனர். அதே போல கொரோனா வைரசால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வீட்டின் உள்ளே அடைந்து கிடக்கின்றனர். அதே போல பிரபலங்கள் பலரும் உடற்பயிற்சி, வவீட்டு வேலை போன்றவற்றவைகளை செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : தாய் மற்றும் பாட்டியுடன் தனுஷ் எடுத்த செல்ஃபி. வைரலாகும் புகைப்படம்..

- Advertisement -

இந்நிலையில் காமெடி நடிகர் சூரி வீட்டில் தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து பிரியாணி செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் சூரி. காமெடி நடிகரான சூரி, திருமதி செல்வம் என்ற தொடரில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் நினைவிருக்கும் வரை, தீபாவளி என்று பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால், சூரி ஒரு முழு காமெடி நடிகராக அடையாளம் காணபட்டது என்னவோ வென்னிலா கபடி குழு படத்தின் மூலம் தான். அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா கடை காமெடி மூலம் இவருக்கு பரோட்டா சூரி என்று பெயர் வந்தது. ஆனால், தற்போது பாராட்டோவில் இருந்து பிரியாணிக்கு மாறியுள்ளார் சூரி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : எப்பேய், கருணாஸ் மகனா இது ? எப்படி படு ஸ்டைலிஷா மாறிட்டாரு பாருப்பேய்.

-விளம்பரம்-

ஏற்கனவே சூரி கொரோனா விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார் அது போக சூரியின் பிள்ளைகள் கொரோனா வைரஸ் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். அந்த வீடியோவை சூரி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுஇருந்தார் . அந்த வீடியோவும் சமூக வளைத்ததில் வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement