யாழ்ப்பாணத்தின் அடையாளம் இது அல்ல – பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன்

0
94
- Advertisement -

சமீபத்தில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் நடந்த பிரச்சனைகள் குறித்து பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஸ்டார் லைட் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிலருக்கு காயமும் ஏற்பட்டது அதிகப்படியான ரசிகர்கள் உள்ளே நுழைந்ததால் நிகழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் பல்வேறு பிரச்சனைக்கு பின்னர் எந்த நிகழ்ச்சி நிறைவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் பேசியுள்ளது ‘யாழ்ப்பாணத்தின் அடையாளம் இது அல்ல. நடந்த தவறுகளுக்கு அதற்கு உரியவர்கள் பொறுப்பேற்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி நடத்துவதும் அதன் மூலமாக முதலீடுகளை கொண்டு வருவதும் வரவேற்கத்தக்க விஷயம் தான் என்றாலும் அந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களில் பொறுப்பில்லாமல் இருக்கக் கூடாது.

- Advertisement -

இந்த நிகழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சரியான திட்டமிடல் இல்லை என்று தான் பலரும் கூறுகிறார்கள். இதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற ஒரு சிலர்களை தவறாக சித்தரித்து அவர்கள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த யாழ்ப்பாணை மக்களையே திசை திருப்புவது ஒரு அரசியலாகவே தெரிகிறது.

இந்த தவறை செய்த பார்வையாளர்களை நான் கண்டிப்பதோடு எங்கள் மண்ணிற்கு வந்திருந்த விருந்தினர்களை சங்கடப்படுத்தாமல் பார்த்துக் கொள்வதும் நம் பண்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆக்ரோஷமான மனநிலையில் இருக்கும் மக்களை எப்படி கையாள வேண்டும் என்பது முன்கூட்டியே திட்டமிட்டு இருக்க வேண்டும். ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாணவர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டதாக நான் அறிந்து கொண்டேன்.

-விளம்பரம்-

மாணவர்களைக் கொண்டு எப்படி ஆயிரக்கணக்கான ரசிகர்களை கையாள முடியும் என்பது ஆச்சரியமானதாகவும் ஒரு தவறான முன்னுதாரணமாகவும் அமைகிறது. மேலும் யாழ்ப்பாணம் வர யாருக்கும் விருப்பமில்லை நாம் சமாளித்து வர வைத்துள்ளோம் போன்ற கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியில் இப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது. பயன்படுத்தும் வார்த்தைகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திற்கு நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் இருந்த சகோதரர் இந்திரன் பத்மநாபன் இந்த விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனமாக இருந்திருக்க வேண்டும். அதே சமயத்தில் எந்த விஷயத்தை வைத்து யாழ்ப்பாண மக்களை தவறாக சித்தரிக்கும் ஊடகங்களுக்கும் பொறுப்புகள் இருக்கிறது. இது போன்ற விழாக்களில் எமது மக்கள் கண்ணியத்தோடு நடந்திருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு இனிமேல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் முன்னர் அதற்கான திட்ட மொழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசி இருக்கிறார்

Advertisement