தாய் சொல்லை தட்டாமல் நடந்து கொண்ட சிம்புவிற்கு அவரது அம்மா கொடுத்த விலையுயர்ந்த பரிசு. என்ன தெரியுமா ?

0
82351
simbu

சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருவது பலரும் அறிந்த ஒன்று. இந்த தொடங்கப்பட்ட சிறுது மாதத்திலேயே இந்த படம் கைவிடப்பட்டது என்று அறிவித்திருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு கூடிய விரைவில் நடிகரை தேர்ந்தெடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் தயாரிப்பாளர். இதனைத் தொடர்ந்து சிம்பு ” மகா மாநாடு” என்ற படத்தை தந்தை டி. ராஜேந்திரன் அவர்கள் இயக்க எடுக்கப் போகிறோம் என்று அதிரடி அறிவிப்புகளை தெரிவித்திருந்தார். இப்படி இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சிம்பு மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது.

Image

இந்த மாநாடு படத்தின் சர்ச்சைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய தயாரிப்பாளர் சிம்பு இந்த படத்தில் நடிப்பதற்காக 2 கோடி ரூபாய் பணத்தை முன்பணமாக வாங்கி இருந்தார். இதை திருப்பி கேட்ட போது சிம்பு மாநாடு ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையை அவர் கூறினார்.இதுகுறித்து சிம்புவின் தாயார் நிஷா கூறுகையில்,என்னுடைய மகன் சிம்பு ஏற்கனவே கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை தயாரிப்பாளர்கள் தான் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. சிம்பு எப்பவுமே படத்திற்காக கொடுத்த கால்ஷீட் நேரத்துக்கு தவறாமல் போய் நடித்து வருபவர்.

- Advertisement -

அதற்கு பின்னால் இனிமேல் சிம்புவை மாநாடு பட சூட்டிங்க் அனுப்புகிறேன். காலை10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று உறுதி அளித்தார் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர். அவர் கூறியது போலவே சிம்பு சபரி மலைக்கு சென்று வந்துவிட்டு மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் நின்று போன நிலையில் சிம்பு உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக வந்தார்.

அதுமட்டுமல்லாது இடையில் கிடைத்த கேப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்து கொடுத்தார். பின்னர் அதே வேகத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. இப்படி ஒரு நிலையில் ஒயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் திருமதி உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்தார். நீண்ட நாளாக நடிகர் சிலம்பரசன் டி.ஆர் விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்துள்ளார். தனது தாயின் பாசமிகு பரிசை பெற்றுக்கொண்ட நடிகர் சிலம்பரசன் டி.ஆர் தற்போது தனது புதிய காரில் உலா வருகிறா

-விளம்பரம்-
Advertisement