தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிம்பு தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சியுடன் முதன் முறையாக கை கோர்த்துள்ளார் சிம்பு.
#STR the style icon is back to his hunky best, for the #SundarC film?.. #Simbu pic.twitter.com/3e2ixJw3Wl
— Kaushik LM (@LMKMovieManiac) September 18, 2018
பெயரிடப்படாதா இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று லைக்கா நிறுவத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சமீத்தில் ஜார்ஜியாவில் துவங்கபட்டுள்ளது.
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரிண்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரிமேக்கில் தான் தற்போது சிம்பு நடித்திவருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவின் கெட்டப் என்னவெண்ரு சமீபத்தில் பட்டப்படிப்பின் போது சிம்பு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ள “எனை நோக்கி பாயும் தோட்ட” படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மேகா ஆகாஷ் தான் சிம்பு படத்திலும் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப் ஆப் ஆதி இசையமைக்கயுள்ளார்.