விஜய் சார் கொடுத்த வைர நெக்லஸோட விலை ரெண்டு, மூனு லட்சத்துக்குமேல இருக்கும்னு சொல்றாங்க – விழா குறித்து நந்தினி பேட்டி

0
2136
- Advertisement -

விழாவில் விஜய் வைர நெக்லக்ஸ் கொடுத்தது குறித்து மாணவி நந்தினி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு இருப்பது விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்வு குறித்து தான். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

விருது வழங்கிய விஜய்:

அந்த விழாவில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்களின் கோரிக்கையும் மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கிறார். மேலும், இந்த விழாவில் தமிழக +2 பொதுத்தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்த நந்தினிக்கு விஜய் அவர்கள் வைர நெக்லஸை பாராட்டி பரிசாக கொடுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து நந்தினி கூறியிருப்பது, விஜய் சாரை சந்தித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

மாணவி நந்தினி அளித்த பேட்டி:

அவர் எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி வைர நெக்லஸை போட்டு விட சொன்ன அந்த நிமிஷத்தை என்னால் மறக்கவே முடியாது. அது ஒரு அற்புதமான தருணம். மாவட்டம் முழுவதும் நல்ல மதிப்பெண்கள் எடுத்த எல்லா மாணவர்களையும் விஜய் சார் சந்திக்கப் போகிறார் என்பது மட்டும்தான் தெரியும். நெக்லஸ் எல்லாம் கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்தது. நான் இதுவரைக்கும் தங்கத்தில் நெக்லஸ் போட்டதே இல்லை. அதெல்லாம் வாங்குறதுக்கு எங்களுக்கு வசதியும் கிடையாது. எல்லாம் கனவாக தான் இருந்தது. ஆனால், என்னோட கல்வி என்னை கைவிடவில்லை.

-விளம்பரம்-

விஜய் குறித்து சொன்னது:

அதுவும் விஜய் சார் கையால் கொடுக்க வைத்திருக்கிறது என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. விஜய் சார் இதுவரைக்கும் படங்களில் தான் பார்த்திருக்கிறேன். அவரோட மெர்சல் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். சமூகத்துக்கு நல்ல மெசேஜ் சொன்ன படம். படத்தில் எப்படி நல்ல விஷயங்கள் செய்து ஹீரோவாக இருக்கிறாரோ, நிஜத்திலும் ஹீரோவாகத்தான் இருக்கிறார். எங்க மாணவர்கள் மேல அக்கறையாக இருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எங்களை ஊக்கப்படுத்தனும் என்று கோடி கணக்கில் செலவு பண்ணி பெரிய விழாவை எடுத்து இருக்கிறார். அவர் பாராட்டினத்தில் இன்னும் சாதிக்கணும் என்று ஊக்கம் கிடைத்திருக்கிறது.

வைர நெக்லக்ஸ் குறித்த தகவல்:

விஜய் சார் கொடுத்த வைர நெக்லஸ் விலை இரண்டு மூன்று லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள். என் கல்விக்காக கிடைத்த பரிசு இது. அதனால் வைர நெக்லஸை கடைசி வரைக்கும் பொக்கிஷமாக நான் பாதுகாப்பேன். ஊர்காரர்கள் எல்லாம் வந்து வாழ்த்து சொல்லிட்டு போனார்கள். இதற்காக விஜய் சார் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விழா முடியும் வரைக்கும் எல்லா மாணவர்களும் அங்கு தான் இருந்தோம். விஜய் சாரும் கடைசிவரை நின்று எல்லா மாணவர்களுக்கும் பரிசை கொடுத்துவிட்டு சென்றார். அவரால் எப்படி அவ்ளோ நேரம் நிக்க முடிந்தது என்று தெரியவில்லை. அதுவும் மேடைக்கு வந்ததிலிருந்து சாப்பிட கூட போகவே இல்லை. பசியோடவே நின்று மாணவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் அன்பாக நலம் விசாரித்து பரிசு கொடுத்தார். உண்மையில் விஜய் சார் தான் ரியல் ஹீரோ என்று கூறி இருக்கிறார்.

Advertisement