உடல் எடை குறித்து கமண்ட் செய்த ரசிகர், ராட்சசன் புகழ் அம்மு அபிராமி கூலாக கொடுத்த பதில்

0
1585
- Advertisement -

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோரியினாக மாறிய நடிகைகள் பலர் இருக்கின்றனர். பேபி ஷாலினி துவங்கி பேபி அனிகா வரை எத்தனையோ நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயின் ஆன நடிகைகள் தான். அந்த லிஸ்டில் அம்மு அபிராமிக்கும் ஒரு இடம் உண்டு. ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இளம் நடிகையான அம்மு அபிராமி.

-விளம்பரம்-

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நடிகை அபிராமி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்து இருந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது “ராட்சசன்” படத்தில் தான்.

- Advertisement -

தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் நடிகை அம்மு அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷின் பிளாஷ் பேக் காட்சியில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் தனுஷுக்கு நிகராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை அம்மு அபிராமி. இதனை தொடர்ந்து பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மு அபிராமி அடிக்கடி தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் தன்னுடைய மேக்கப் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் இதற்கு ரசிகர்கள் பலரும் பாசிட்டிவாக கமெண்ட் செய்து வந்தார்கள். அந்த வகையில் ஒருவர் ரொம்ப வெயிட் போட்டே போறீங்க என்று கமெண்ட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு அம்மு அபிராமி ‘அதனால் என்ன ?’ என்று பதில் கொடுக்க, அதற்கு அந்த நபரும் ஒன்றுமில்லை அப்படியே இருங்கள் என்று நைசாக கமெண்ட் செய்து விட்டு எஸ்கேப் போனார்இறுதியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இடையில் இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்த சீசனில் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் கூட பல ரசிகர்களின் மனதை கொல்லை கொண்டார். தற்போது இவர் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Advertisement