அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ராஷமிகா பேச்சு – சுதீப் மறைமுக அறிவுரை

0
384
- Advertisement -

எல்லா நடிகர்களும் சினிமாத்துறைக்கு வந்த சிறிதுகாலத்தில் பிரபலமாக ஆவதில்லை. ஆனால் புஷ்பா படத்திற்கு பிறகு தென்னிந்தியா முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக ஏன் ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் தெலுங்கு கன்னடம் என கலக்கி வந்த ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவிலும் இப்போது கலக்கி வருகிறார்.சமீபத்தில் தெலுங்கில் வெளியான “புஷ்பா” திரைப்படம் பெரியா அளவில் ஹிட் அடிக்கவே அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட சுல்தான் படத்தில் வருகின்றனர். ஜோடியாக நடித்திருந்தார். கன்னட சினிமாவில் “கீதா கோவிந்தம்” படத்தின் “இங்கேம் இன்கேம்” என்ற தெலுங்கு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. நடிகை ராஷ்மிகா குறைவான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சோசியல் மீடியா பக்கங்களில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக முன்னிலையில் இருந்து வருகிறார்.

- Advertisement -

காந்தாரா சர்ச்சை :

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி படக்குழுவினருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த “காந்தாரா” திரைப்படம் பற்றி தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய கருத்துகளினால் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டார். ஏனென்றால் காந்தாரா திரைப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தான் ராஷ்மிகாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் இவரை குரு என்ற முறையில் மதிக்காமல் “காந்தாரா” படத்தை தான் பார்க்கவில்லை என்று கூறியது கன்னட ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தென்னிந்தியா சினிமாவை மட்டம் தட்டிய ராஷ்மிகா :

மேலும் இந்த பிரச்னையால் ராஷ்மிகா தான் எங்கிருந்து வந்தோம் என்பதை மறைத்துவிட்டு மற்ற மொழி படங்களில் நடித்து வருவதாகவும் கூறி கன்னட சினிமாவில் நடிக்க கூடாது என சில கண்டங்கள் எழுந்தன. இந்த நிலையில் சமீபத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த மிஷன் மஜ்னு என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் சர்ச்சையாக சில விஷியங்களை கூறி தென்னிந்திய சினிமாவை மட்டம் தட்டி பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.

-விளம்பரம்-

அறிவுரை கூறிய சுதீப் :

இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப்பிடம் ராஷ்மிகாவை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுதீப், இந்த மாதிரியான விஷியங்களை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். நாம் என்ன பேசுகிறோம், யாரவது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்மை சோசியல் மீடியாவில் 10 மில்லியன் மக்கள் பின் தொடர வேண்டும் என்று நினைக்கிறோம், ஆனால் அதே நேரத்தில் எதிரான கருத்துகள் வரக்கூடாது என விரும்புகிறோம்.

ஒருவர் சினிமாவில் பொதுவாக நடிக்க வந்துவிட்டால் உங்களின் மீது சில சமயங்களில் பூ மாலைகளும் விழும், தக்காளி, அழுகிய முட்டை, கற்களும் விழும். சினிமா என்று வந்துவிட்டால் கண்டிப்பாக சோசியல் மீடியாவின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கும். அதனால் எல்லா இடத்திலும் சரியாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் நடிகர் கிச்சா சுதீப்.

Advertisement