நாளுக்கு நாள் படையெடுக்கும் புதுமுக நடிகைகளின் வரவால் ஒருசில நாயகிகளை ஒருசில படங்களுக்கு பிறகு பார்ப்பது அரிதாகிவிட்டது. அந்தவகையில் முதல் படத்திற்கு பிறகு வெளியில் தெரியாத நடிகைகளில் ஒருவர் இந்தியா பாகிஸ்தான் நாயகி சுஸ்மா ராஜ்.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘இந்தியா பாகிஸ்தான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் முழுக்க முழுக்க ஹீரோ, ஹீரோயின் சம்மந்தப்பட்ட கதை என்பதால் படத்தின் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
படம் முழுவதும் மிகவும் குடும்பபாங்கானா பெண்ணாக நடித்திருப்பார் சுஷ்மா ராஜ். இந்தப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தாலும் ஆனாலும் அதன்பிறகு இவரை எந்தப்படத்திலும் காண முடியவில்லை. இருப்பினும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளிவந்த “நாயகி ” என்ற படத்தில்துணை நடிகையாக நடித்திருந்தார்.
தற்போது படங்களில் வாய்ப்பில்லை என்றாலும் சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் அம்மணி. இந்த நிலையில் சமீபத்தில் ஹவாய் தீவில் நீர்வீழ்ச்சி ஒன்றில் குளியல் போட்டுள்ளார் அம்மணி.