தீபாவளியை முன்னிட்டு ‘பீஸ்ட்’ சூப்பர் ஹிட் திரைப்படம் – சன் டிவி வெளியிட்ட ப்ரோமோ. வச்சி செய்த நெட்டிசன்கள்.

0
506
Beast
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த படம் பேன் இந்திய படமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜய் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று சிலர் கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த படம் வெளியான முதல் நாளே சமூக வலைதளத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. அதோடு முதலில் திரையரங்களில் வெளியான இந்த படம்சில நாட்களிலேயே நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய தளங்களிலும் வெளியாகியிருந்தது.

மேலும், ஓடிடியில் இந்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு உள்ளதால் நாடு முழுவதிலும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தது. இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் சோஷியல் மீடியாவில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகிவந்தது. இந்த படம் Ottயில் வெளியான போது இந்த படத்தை பார்த்துவிட்டு ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை விமானி சிவராமன் சஜ்ஜன் வெளியிட்ட டுவிட்டர் தான் பீஸ்ட் டிரெண்டிங்க்கு காரணம் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

ஏனெனில் , திரைப்படத்தில் ரா உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருப்பார். கிளைமாக்ஸில் தன்னந்தனியாக பாகிஸ்தானுக்கு ஜெட் விமானத்தில் சென்று பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தலைவனை பிடித்து வருவார். அப்போது பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருந்து விஜய் சூசகமாக தப்பித்து வருவது போல காட்சி வரும். இந்த சீனை வீடியோவாக கேப்டன் சிவராமன் டுவிட்டரில் வெளியிட்டு இதில் எனக்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து பல ஏர் இந்திய கமாண்டர்கள் பலரும் இந்த காட்சியை கேலி செய்ய இந்திய அளவில் troll மெட்டீரியலாக ஆனது பீஸ்ட் படம். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை தீபாவளியை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்ப இருக்கின்றனர். அதற்கான ப்ரோமோ ஒன்றை சன் டிவி வெளியிட்டு இருந்தது. அதில் வழக்கம் போல ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக அக்டோபர் 24 திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு விஜய் பூஜா நடித்த பீஸ்ட் புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம்’ என்று குறிப்பிட்டு இருந்தது.

இதை கண்ட நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா ? பீஸ்ட் படம் சூப்பர் ஹிட் திரைப்படமா என்று கலாய்த்து தள்ளி பல விதமான மீம்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் பீஸ்ட் படத்தை சூப்பர் ஹிட் திரைப்படம் என்று சன் டிவி குறிப்பிட்டு இருப்பதை கேட்டு நெல்சன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது போல வடிவேலு மீம்களை போட்டு கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Advertisement