பாக்யராஜிடம் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பாண்டியராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பாண்டியராஜன். இவரை புதுமைக் கலை மன்னன் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். சினிமாவிற்கு தோற்றம், உயரம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர். பாண்டியராஜன் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது திருட்டு முளியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக் விசுக்கென நடக்கும் நடை தான். இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் தான். இயக்குனராக பணி புரிந்தார். பின் தனது 23 வயதிலேயே சினிமா உலகில் இயக்குனராக பிரபலம் அடைந்தார்.
இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், பாண்டியராஜன் அவர்கள் கன்னிராசி படம் மூலம் தான் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து இவர் 10 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் பிற கலைஞர்களையும் சினிமாவில் வளர்த்து இருக்கிறார். இப்படி இவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகள் ஏராளம். நடுவில் பாண்டியராஜன் அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். தற்போது இவர் பிறகு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த படத்திலும் பாண்டியராஜன் நடித்திருந்தார்.
பாண்டியராஜன் திரைப்பயணம்:
இதனைத் தொடர்ந்து பாண்டியராஜன் அவர்கள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாக்யராஜிடம் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பாண்டியராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், என்னுடைய இயக்குனர் பாக்யராஜ். அவருடைய சுவரில்லாத சித்திரங்கள் படத்தை பார்த்துவிட்டு அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. அந்த படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் என்னைப் போலவே இருந்தது. அதில் உள்ளவர்களின் வயதும் எனக்கு இணையாகவே இருந்தது.
பாண்டியராஜன் அளித்த பேட்டி:
அதனால்தான் என்னை சினிமாவுக்குள் கொண்டு வந்தது. என்னடா இது! இப்படி ஒரு இயக்குனரா! என்று அவரை ஆச்சரியத்துடன் நான் பார்த்தேன். அவர் என் மனதுக்குள்ளயே இருந்தார். அவரிடம் உதவியாளராக சேர்வதற்கு வாய்ப்புகள் வரும். ஆனால், சில மணி நேரங்களில் அந்த வாய்ப்பு பறிபோய்விடும். பின் பாக்யராஜ் எழுதிய டயலாக்கை காப்பி பண்ண கூட கூடிய வேலை வந்தது. இதை அவரே எதிர் பார்க்காத அளவுக்கு சிறப்பாக வடிவமைத்து அவரிடம் கொடுத்தேன். அவர் ஆச்சரியத்துடன் பார்த்து என்னை, வாங்க போங்க என்று சொன்னார். அப்போது என்னை உதவியாளராக சேர இன்னொரு இயக்குனர் பரிந்துரைத்தார். அப்போது அவர், என்னிடம் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள் என்று மறுத்துவிட்டார்.
பாக்யராஜ் குறித்து சொன்னது:
அதன் பின்னர் பாக்யராஜ் சாரின் அசிஸ்டன்டுகளுக்கு என்னென்ன எடுபுடி வேலை பார்க்க வேண்டுமோ அத்தனையும் பார்த்தேன். அவர்களிடம் நல்ல பெயரையும் எடுத்தேன். ஒருமுறை மதிய உணவு பாக்கியராஜ் சார் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவரிடம் என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டேன். அவர் கொஞ்சம் டென்ஷன் ஆகி, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். என்னிடம் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் என்று கூறினார். மௌன கீதங்கள் படபிடிப்பு அடையாற்றில் நடைபெற இருந்தது. அந்த இடத்திற்கு வரும்படி பாக்யராஜ் அசிஸ்டன்ட் என்னிடம் சொன்னார். அப்போது அவர் கண்ணில் படாமல் சூட்டிங் ஸ்பாட்டில் ஒதுங்கி இருந்தேன்.
உதவி இயக்குனர் அனுபவம்:
ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது கிளாப் அடித்து விட்டு உடனடியாக ஓடி ஒளிந்து கொண்டேன். அவர் யார் என்று சுற்றி சுற்றிப் பார்த்தார். கடைசியாக என்னை கண்டுபிடித்து உன்னை யார் கிளாஸ் அடிக்க சொன்னது? என்று கேட்டார். பின் திடீரென அவர் காலில் விழுந்து நான் அப்ப இல்லாத பையன் சார். எப்படியாவது எனக்கு ஒரு தொழில் கற்றுக் கொடுங்கள் என்று கொஞ்சினேன். இதனை படக்குழுவினர் பரிதாபமாக பார்த்தனர். பாக்கியராஜ் சுற்றிலும் பார்த்துவிட்டு சரி சரி கண்டினியூ பண்ணு என்று சொன்னார். அப்போது தான் என்னுடைய வாழ்க்கை தொடங்கியது. இந்த அளவிற்கு என் வாழ்க்கையில் முன்னேறியதற்கு பாக்யராஜ் சார் காரணம் என்று கூறியிருந்தார்.