10 ஆண்டுகள் கழித்து ஆங்கராக களமிறங்கும் அஞ்சனா.! ஆனால், இம்முறை இந்த டிவியில்.!

0
377

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார்.  

நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இந்த இளம் ஜோடியினருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரது திருமணமும் கோடம்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் சந்திரன்- அஞ்சனா ஜோடிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது இந்த தகவலை சஞ்சனாவின் கணவர் சந்திரன் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த தகவலை கேட்ட ஞ்சனாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 

திருமணத்திற்குப் பின் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் அஞ்சனா இனி தொகுப்பாளினி பணியை தொடர்வாரா என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார் அஞ்சனா. ஆனால், இம்முறை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிரங்க உள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஞ்சனா இதனால் அவரது ரசிகர்கள் வெறும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்