சன் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்த சன் மியூசிக் தொலைக்காட்சியில் வி ஜே-கள் அறிமுகமான காலத்தில் பல்வேறு வீடியோ ஜாக்கிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். அந்த வகையில் வசீகரமான தோற்றத்துடன் பல இளசுகளின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா. பிக் பாஸ் காஜல், ப்ரஜின், ஆனந்த கண்ணன் ஆகியோர் தொகுப்பாளராக பணியாற்றிய காலத்தில் விஜேவாக பணியாற்றியவர் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா.
சன் ம்யூசிக் ஆரம்பித்த ஆரம்ப காலகட்டம் முதல் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர், ராஜு முருகன் என்ற திரைப்பட இயக்குனரை காதலித்து வந்தார். ராஜு முருகன் வேறு யாரும் இல்லை. தமிழில் தினேஷ் நடிப்பில் வெளியான ‘குக்கூ’ படத்தை இயக்கியவர் தான்.மேலும், அந்த படத்தை தொடர்ந்து ‘ஜோக்கர் ‘ படத்தையும் இயக்கினார் ராஜு முருகன்.
இதையும் பாருங்க : இந்தாண்டு தான் திருணம் ஆச்சி, அதுக்குள்ளயா – ஆனந்திக்கு குவியும் வாழ்த்துக்கள். எல்லா நல்ல செய்தி தான்.
சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற ஜிப்ஸி திரைப்படத்தை இயக்கியதும் இவர் தான். ஜோக்கர்’ படம் வெளியான சில நாட்களில் திருமணம் செய்யவிருப்பதாக இயக்குநர் ராஜூமுருகன் தெரிவித்திருந்தார். இதயடுத்து இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். ஹேமா சின்ஹா மற்றும் இயக்குனர் ராஜூ முருகனின் திருமணம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி பெசன்ட் நகரில் உள்ள கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது.
இருவரின் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.திருமணத்திற்கு பின்னர் ஹேமா சின்ஹாவை தொலைக்காட்சியில் காண முடியவில்லை. இந்த நிலையில் இந்த தம்பதியருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வியாழக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் இவரது குடும்ப புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹேமா சின்ஹாவா இது என்று வியந்து போய்யுள்ளனர்.