போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து, கோர்ட்டில் வழக்கு – விவாகரத்து குறித்து மனம் திறந்த ரஷிதாவின் கணவர் தினேஷ்.

0
1323
- Advertisement -

விவாகரத்து குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகர் தினேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே ரக்ஷிதா- தினேஷ் உடைய விவகாரம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதோடு இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார். இதனிடையே ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ரக்ஷிதா-தினேஷ் விவகாரம்:

இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரிய வில்லை. இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை.

தினேஷ் மீது ரக்ஷிதா புகார்

மேலும், இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், சமீபத்தில் தன்னுடைய குடும்ப பிரச்சினை குறித்து தினேஷ் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். கணவன் மனைவி பிரச்சனை என்றால் நண்பர்கள் என்ற பெயரில் மூன்றாவது நபர் தலையிடுவது தான் பிரச்சனை பெரிதாகிறது.
எங்கள் பிரச்சனையிலும் அப்படி தான் நடந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதன் பின் டப்பிங் ஆர்டிஸ்ட் ஜிஜி அவர்கள் சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் தினேஷ் மீது புகார் அளித்திருக்கிறார். பின் அந்த நாளிலேயே சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் தினேஷ் மீது ரக்ஷிதா புகார் அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தினேஷ்- ரக்ஷிதா விவாகரத்து:

அதில் ரக்ஷிதா அவர்கள் தினேஷ் மீது சில காரணங்களை கூறி பிரிய இருப்பதாக சொன்னார். அதில் தினேஷ் தன்னுடைய பெற்றோர்களை மதிக்கவில்லை என்றும் பணம் பணம் என்று நச்சரிப்பார் என்றும் ரக்ஷிதா கூறியிருக்கிறார். இதற்கு தினேஷை போலீசார் விசாரித்து அனுப்பி இருக்கிறார்கள். இதனை அடுத்து தினேஷ்-ரக்ஷிதா விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய விவாகரத்து குறித்து நடிகர் தினேஷ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

தினேஷ் அளித்த பேட்டி:

அதில் அவர், எனக்கும் ரக்ஷிதாவிற்கும் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் விவாகரத்து ஆகவில்லை. பிக் பாஸில் ரக்ஷிதா கலந்து கொண்ட போது அவர் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைத்தேன். ஒருவேளை நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் கூட அந்த டைட்டில் அவருக்காக வெற்றி பெற்று கொடுக்கலாம். ஆனால், எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விருப்பமில்லை. நான் இப்போது சீரியலில் பிஸியாக இருக்கிறேன் என்று ரக்ஷிதாவை நினைத்து வருத்தப்பட்டு பேசி இருந்தார்.

Advertisement