ப்ளூ சட்டைக்கு சன் டிவி வைத்த ஆப்பு.! இப்படி கூட அவங்களால செய்ய முடியுமா.!

0
997
MARAN

மாறன் என்பதை விட ப்ளூ சட்டை என்பது தான் இவரது அடையாளம்., பெரும்பாலும் இவரது விமர்சனங்கள் கலாய்ப்பது போல தான் இருக்கும். சூப்பரான படங்களுக்கு கூட இவர் சுமாரான சான்றிதழை தான் அளிப்பார். இதனாலேயே இவர் மீது பல சினிமா தயாரிப்பளர்களும், நடிகர்களும் செம காண்டில் இருந்தனர்.

ஆனால், சமீபத்தில் வெளியான பேட்ட படத்தால் இவரது வீடியோ யூடுயூபில் இருந்தே நீக்கபட்டுள்ளது. பேட்ட திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை விமர்சித்த மாறன் வழக்கம் போல இந்த படத்தைதையும் கழுவி ஊற்றினார்.

- Advertisement -

இந்த படத்தை பற்றி அவர் தெரிவிக்கையில், முதல் பாதி மிக அற்புதமாக இருந்தது. நீங்கள் ரஜினி ரசிகராக இருந்தால் உங்களுக்கு முதல் பாதியே போதும் போதும் என்றாகிவிடும் ஆனால், இரண்டாம் பாதி வேறு யாரோ எடுத்தது போல இருந்தது. சொல்லப்போனால் இரண்டாம் பாதியை தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருப்பார் என்று மாறன் விமர்சித்திருந்தார்.

பொதுவாக மாறனின் விமர்சனத்திற்கு கூட ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர். இந்த நிலையில் பேட்ட படத்தை பற்றி மாறன் செய்த விமர்சன வீடியோ திடீரென்று யூடுயூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரபல விமர்சகரான பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

மாறனின் பேட்ட விமர்சன வீடியோ காப்புரிமை காரணமாக யூடுயூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், அவர் சுயமாக கூறிய விமர்சனம் எந்த வகையில் காப்புரிமை மீறலில் வந்தது என்பது தான் கேள்வியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் பேட்ட படத்தை காப்பாற்றிக்கொள்ள இப்படி ஒரு வேலையை செய்துள்னனர் என்ற ஒரு செய்தியும் பரவி வருகிறது.

Advertisement