லட்சுமி ஸ்டோர்ஸில் நான் தான் முதலில் கதாநாயகி.! ஆனால், குஷ்பு என்னை ஏமாற்றிவிட்டார்.!

0
1983
Lakshmi-stores

சன் தொலைகாட்சியில் சமீபத்தில் துவங்கபட்ட புதிய சீரியல் தான் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’. இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை குஷ்புவும் பிரபல தொகுப்பாளினியாக நக்ஷத்ராவும் நடித்து வருகின்றனர். இந்த தொடரை குஷ்புவின் அவ்னி கிரேஷன் தான் தயாரித்து வருகிறது.

இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ சீரியலை தொடர்ந்து குஷ்பு தயாரிக்கும் சீரியல் இது. மேலும், இந்த சிரியலில் பிரபல நடிகையும், நடன கலைஞரான ஜெனிபரும் நடித்து வந்தார். ஆனால், தற்போது திடீரென்று விலகியுள்ளார்.

- Advertisement -

ஜெனிபர், தமிழ் சினிமாவில் ரிதம், முத்தம், அற்புதம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க உள்ளிட்ட பல படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த சில ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் இருந்து வந்ததால் தற்போது சீரியல் பக்கம் திரும்பினார்.

இந்த நிலையில் இவர் திடீரென்று சீரியல்ல இருந்து விலகினார். இதுகுறித்து அவர் பேசுகையில், நான் ஏற்கனவே சில சீரியல்களில் நடித்து வருகிறேன். லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் வாய்ப்பு வந்தது. அதில் எனக்கு குஷ்பு மேடத்துக்கு அடுத்தப்படியான நாயகி வேடம் என்று தான் முதலில் கூறப்பட்டது. அதனால் தான் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

-விளம்பரம்-

மூன்று மாதங்கள் படப்பிடிப்பு போன பிறகு, திடீரென நட்சத்திரா நடிக்க வந்தார். அப்போது தான் எனக்கு தெரிந்தது.குஷ்பு மேடம் ஒரு சீனியர் நடிகை. அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. லட்சுமி ஸ்டோர்ஸ் நாடகக்குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டனர். நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு, துணை நடிகையாக்கிவிட்டனர் என்று புலம்பி வருகிறார்.

Advertisement