ரோஜா நாயகி பிரியங்கா காதலரை பார்த்துள்ளீர்களா.. விரைவில் திருமணமாம்..

0
15616
roja

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் பத்தி நம்ம எல்லோருக்கும் தெரியும். இப்போது டிரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் ரோஜா சீரியல் தான் பட்டையை கிளப்புகிறது. இந்த ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் தான் பிரியங்கா. தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “எல்லாத்துக்கும் சாரி, எப்படா வருவ? நான் உனக்காக காத்துட்டு இருக்கேன்டா”, என்று செம ஃபீலிங் காதலனை நினைத்து ரோஜா கூறியிருந்தார். இதுகுறித்து இணையங்களில் பலவிதமான கருத்துகள் எழுந்தன. இது குறித்து தற்போது “ரோஜா” சீரியல் சூட்டிங் இடத்திற்கே பேட்டியாளர்கள் சென்று விட்டார்கள். மேலும், அவரிடம் இதற்கான காரணத்தை கேட்டார். பிரியங்கா பேட்டியில் கூறியது, தெலுங்கு சினிமா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல தமிழ் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு தீராத ஆசை இருந்தது. யார் யாரையோ பார்த்து? வாய்ப்பு கேட்டு, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை போல எனக்கு தமிழில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Image result for roja serial

மேலும்,”தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற படத்தில் ஹன்சிகாவுக்கு ஃப்ரெண்ட் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . நான் பயங்கர ஹாப்பி ஆயிட்டன். எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருந்தேன் ஹன்சிகா ஃப்ரெண்ட் கேரக்டரில் நடிக்கிறேன். ஆனால், நான் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கல. திடீரென்று எனக்கு அந்த வாய்ப்பு என் கையை விட்டு நழுவி போய்விட்டது. அதற்குப் பின்னால் எனக்கு சரியான சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் சன் டிவியில் ‘ரோஜா’ சீரியல் காண ஆடிஷன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் ரோஜா கேரக்டரில் நடிக்க ரோஜா சீரியல் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் சீரியல் சும்மா ஜெட் வேகத்தில் பல சுவாரசியங்களும், திரில்லிங் ,காமெடி எல்லாம் கலந்த மாதிரி இருப்பதை பார்த்து ரசிகர்கள் எங்களுக்கு பகலில் வேலை இருக்கு நைட் டைம்ல சீரியலை வையுங்க.

இதையும் பாருங்க : நேர்கொண்ட பார்வை நடிகை 5 வருசத்துக்கு முன்னாள் எவ்வளவு குண்டா இருக்காரு பாருங்க..

- Advertisement -

அப்பத்தான் நாங்க வந்து பார்க்க முடியும் என்று நிறைய பேர் எங்களிடம் வேண்டுகோள் வைத்தார்கள். அதனால், தான் நாங்க இப்ப இரவு இரவு நேரத்தில் சீரியலை ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறோம்.மேலும், தமிழ்ல நடிச்ச முதல் சீரியலே இவ்வளவு ஹிட்டுக் கொடுக்கும் என்று நினைச்சு பார்க்கல. சினிமாவுல எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கூட இந்த அளவுக்கு நான் மக்கள் மனதில் இடம்பிடித்து இருப்பானான்னு தெரியில. ஆனால். இந்த ரோஜா சீரியல் மூலம் நான் எல்லார் வீட்டிலேயும், எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்து இருக்கன். அது மட்டும் இல்லைங்க நடிகை ரோஜா அவர்கள் கூட எங்க ஊரிலிருந்து வந்தவங்க தான்.ஆனா, இப்ப எல்லாரும் அவங்களை போலவே என்னையும் ரோஜான்னு தான் கூப்பிடுகிறார்கள். அப்புறம் எங்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மே மாதம் பத்தாம் தேதி நடந்து முடிந்தது. அவருடைய பெயர் ராகுல். அவர் நான் செல்லமா கிட்டுலு தான் கூப்பிடுவேன்.

'roja' priyanga
'ரோஜா' பிரியங்கா

தெலுங்கு சினிமா, டிவி சீரியல்ன்னு எல்லாரும் நீங்க அவர பார்த்து இருப்பிர்கள்.ஏன்னா,அந்த அளவுக்கு தெரிஞ்ச முகம் தான். எல்லாரும் சொல்லுவாங்க, ரெண்டு பேருமே ஒரே வேலையில் இருந்தா. வாழ்க்கை பயணம் ஈசியா இருக்கும். ஆனா, எங்களுக்கு அது தான் வினையாக மாறிடுச்சு. நாங்க ரெண்டு பெரும் சூட்டிங் பிஸியில் ஒருத்தருக்கொருத்தர் பேச முடியாம, பார்க்க முடியாமல் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும், எங்க நிச்சயதார்தம் முடிந்த பின் கல்யாணத்தை எப்ப வைக்கலாம் என்று கேட்ட போது எங்க இரண்டு பேருக்கும் நேரமில்லாமல் தள்ளி போய்க்கொண்டு இருந்தது. அதனால கொஞ்சம் சின்ன, சின்ன சண்டை வந்து பெரிசா வந்துருச்சு.

-விளம்பரம்-

திடீர்னு அவரு எனக்கு இந்த வேலையே வேணாம்னு சொல்லிட்டு மலேசியா சென்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு போயிட்டார். ஆனால், எல்லாரும் சொல்றாங்க எங்களுக்கு பிரேக்கப் ஆயிருச்சுன்னு. அந்த மாதிரிலாம் எதுவும் இல்லைங்க. நாங்க பேசிட்டு தான் இருக்கோம். கூடிய சீக்கிரம் எங்க கல்யாணத்தை பத்தி அறிவிப்போம் என சிரித்துக்கொண்டே சொன்னார். அது மட்டும் இல்லைங்க இந்த வருஷம் கடைசியில் எங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்றார் பிரியங்கா

Advertisement