என்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும் மிகவும் சாதுர்யமாக அந்த தொழில் நுட்பத்திரிக்கு பக்குவமாகி கண்டே பிடிக்கமுடியாத அளவிற்கு கள்ள நோட்டுகளை தயார் செய்து விடுகின்றனர்.
நாம் கள்ள நோட்டை ஒரிஜினல் ருபாய் நோட்டுடன் ஒப்பிட்டு கண்டுபிடிக்க சில வழி முறைகள் இருக்கிறது. ஆனால், அந்த வேலையையும் சுலபமாக்கிவிட்டது இந்த ஆப்(app). இதற்காக அறிமுகமானது தான் Chkfake என்ற செயலி.
இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்க செய்து பயன்படுத்த முடியும். ரூபாய் நோட்டுகளை எளிதாக கண்டறிய உதவும் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்த பின்பு, நீங்கள் சரிபார்க்க வேண்டிய ரூபாய் நோட்டினை ஸ்கேன் செய்து எளிமையாக சரிபார்க்க முடியும். அதனை எவ்வாறு பார்ப்பது என்று வீடியோவில் பாருங்கள்.