அட சர்க்கார் படத்தில் நடித்த இந்த நடிகை சன் டிவி சீரியல் நடிகை தானா.

0
1731
papri
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் பிளாக் பஸ்டர் படங்கள் தான். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சர்க்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறினாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. இப்படி நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அது வேறு யாரும் இல்லை சன் டிவியில் ஒளிபரபாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வரும் பாப்ரி கோஷ் தான்.

-விளம்பரம்-
paprisghosh

நடிகை பாப்ரி கோஷ் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாயகி’ தொடரிலும் நடித்து வருகிறார். சீரியலுக்கு இவர் புதிது என்றாலும் இவர் இந்த இரண்டு தொடருக்கு முன்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சொல்லப்போனால் பாப்ரி கோஷ், ஆரம்பத்தில் சினிமா நடிகையாக தான் அறிமுகமானார். இவர் 2009 ஆம் ஆண்டு பெங்காலி திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமானார்.

- Advertisement -

அதன் பின்னர் இவரை தமிழில் அறிமுகம் செய்தது எஸ் ஏ சந்திரசேகர் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘டூயூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த பி[படத்தில் கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டி நடித்து இருந்தார். அதன் பின்னர் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதே போல இவர் தமிழில் பல்வேரு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஓய், சக்க போடு போடு ராஜா, பைரவா, சர்க்கார் விஸ்வாசம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் எஃப் ஐ ஆர் படத்திலும் நடித்திருக்கிறார். அதே போல பெங்காலி, மராத்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement