பல சீரியல்களில் வில்லியாக கலக்கிய பூஜாவா இது ? என்ன பண்றாங்க ? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
989
Pooja
- Advertisement -

நெகட்டிவ் கதாபாத்திரங்கள் வழியே 12 வருடங்களுக்கு முன்பு சீரியல் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் நடிகை பூஜா. ‘இந்தப் பொண்ணுகிட்ட எவ்வளவு வில்லத்தனம் பாரேன்’ எனப் பேசாத வாய் அரிது. தற்போது, தமிழ் சீரியலுக்கு பிரேக் கொடுத்திருக்கும் அவர் என்னவானார் எங்கு இருகிறார் என்பதே தெரியாமல் போனது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூஜா அளித்த பேட்டியை காணலாம்

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is serial-actresspooja.jpg

சீரியல்களில் என்னை வில்லியாகவே பார்த்திருப்பீங்க. நிஜத்துல பயங்கர ஜாலி பர்சன். யார்கிட்டேயும் சண்டைப் போடுறது பிடிக்காது. என் தாத்தாவும் பாட்டியும் கன்னட மொழியில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். அதனால், எனக்குள்ளும் நடிப்பு விதை இருந்துச்சு. இப்போ, நான் ஃபேமிலியோடு பெங்களூரில் செம ஹேப்பியா இருக்கேன். 14 வயசுல மீடியா வாய்ப்பு கிடைச்சது.

- Advertisement -

கன்னடத்தில் நிறைய படங்களிலும் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன். அதைப் பார்த்து, ‘குங்குமம்’ மெகா சீரியலிலும் நடிக்க, குஷ்பு மேடம் கூப்பிட்டாங்க. அப்படித்தான் சிங்கார சென்னைக்கு வந்தேன். தமிழ் சீரியலில் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களே கிடைச்சது. என் முகத்துக்கும் நெகட்டிவ் கதாபாத்திரம் பொருத்தமாக இருந்துச்சு.

This image has an empty alt attribute; its file name is pooja-serial-actrress.jpg

என் நடிப்பைப் பார்த்துட்டு வெளியிலிருந்து நிறைய திட்டு வந்தாலும், அது எனர்ஜியைத்தான் கொடுத்துச்சு. அதுதானே நம் நடிப்புக்குக் உண்மையான விருது. நான் நடிச்சுட்டு இருந்தப்பவே காஸ்டியூம் டிசைனிங் மேலே ஆர்வமா இருந்தேன். கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் சீரியலில் எனக்கான காஸ்டியூமை நானே டிசைன் பண்ணிக்க ஆரம்பிச்சேன். இப்போ நானே புரொடியூஸ் பண்ற நிகழ்ச்சியில் எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் நான்தான் காஸ்டியூம் டிசைன் பண்றேன்.

-விளம்பரம்-
பூஜா

இப்போ பெங்களூரில் இருக்கோம் ZEE கன்னடால ஸ்டைலிஸ்ட் கன்சல்டன்ட்டா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.நிறைய தமிழ் சீரியல் வாய்ப்பு வருது. இப்பவும் என்னைச் சந்திக்கும் தமிழ் ரசிகர்கள் ‘ப்ளீஸ்… மறுபடியும் நடிக்க வாங்க’னு அன்பு மழையில் நனைக்கிறாங்க. அந்த அன்புக்காகவே மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறேன். அதுவரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கூறிஇருந்தார் .

Advertisement