சன் டிவி சீரியல் நடிகை பூஜாவ ஞாபகம் இருக்கா ? இப்போ எப்படி இருக்கார், என்ன செய்கிறார் தெரியுமா ?

0
5937
pooja
- Advertisement -

சின்னத்திரையில் எவ்வளவோ வில்லிகள் வந்தாலும் ஒரு சில பேரு மட்டும் தான் மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் 12 வருடங்களுக்கு முன்னாடி சீரியலில் வில்லியாக நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை பூஜா. சமீபத்தில் அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியது, 14 வயதில் நான் மீடியாவில் நுழைந்தேன். எங்கள் குடும்பத்தில் இருக்கிற நிறைய பேர் சினிமாவை சேர்ந்தவர்கள் என்பதால் எனக்கும் நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்தது.

-விளம்பரம்-
பூஜா

மேலும், நான் சீரியலில் நுழைவதற்கு முக்கிய காரணமே நடிகை குஷ்பு தான். அவங்க மூலம் தான் எனக்கு குங்குமம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என்னோட அப்பா இறந்த சமயத்தில் நான் கல்கி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போ நான் அதிகமாக கவலைப்பட்டு இருந்ததால் எனக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் வந்தது. அப்போது குஷ்பு மட்டும் இல்லை என்றால் என் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். அவர்கள் என் கூட பிறந்த அக்கா மாதிரி என்னை பார்த்துக் கொண்டார்கள். நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட நாலு வருடத்திற்கு மேலாக பார்த்துக் கொள்ளவே இல்லை.

இதையும் பாருங்க : சிறையில் காதலன், வெளியில் கே டி வேலை பார்த்து 200 கோடி மோசடி – பிரியாணி பட நடிகை கைது.

- Advertisement -

கொரோனாவுக்கு முன்னாடி ஒரு கல்யாண வீட்டில் தான் குஷ்புவை நான் சந்தித்தேன். அவர்கள் என்னை பார்த்ததும் ஓடி வந்து கண்ணைப் பொத்திக்கொண்டு யார் என்று கண்டுபிடி என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு இன்னைக்கும் எங்களுக்கிடையே ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் போய்க்கொண்டிருக்கிறது. இப்ப நான் பெங்களூரில் என் குடும்பத்துடன் இருக்கிறேன். ZEE கன்னடாவில் ஸ்டைலிஸ்ட் கன்சல்டன்ட்டாக வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.

பூஜா

நானும் என் சகோதரனும் சேர்ந்து ஒரு புரோடக்சன் ஹவுஸ் வைத்திருக்கிறோம். அது மூலமாக படம் தயாரிக்கிறோம். அந்த படத்துக்கு ஹீரோயின முதல் எல்லோருக்கும் காஸ்ட்யூம் டிசைனர் நான் தான். அது போக நான் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கிறேன். மேலும், நான் புதிது புதிதாக நிறைய விஷயங்களும் பண்ணிட்டு இருக்கிறேன். வெப்சீரிஸ், சீரியலில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க நான் தயார் என்று புன்னகையுடன் கூறினார்.

-விளம்பரம்-
Advertisement