எதிர்நீச்சல் போல வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்கள்-எதுன்னு நீங்களே பாருங்க

0
820
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் போல வாரத்தின் ஏழு நாட்களும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியல் குறித்த தகவல்:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது.
பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், தற்போது டிஆர்பி உச்சத்தில் இந்த சீரியல் தான் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

அன்பே வா சீரியல்:

தற்போது வாரத்தின் ஏழு நாட்களும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்தி எதிர்நீச்சல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் உடன் இன்னும் இரண்டு தொடர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் தான். இந்த தொடர் 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

நேத்ரா சீரியல்:

இந்த தொடரில் டெல்னா டேவிஸ், விராட் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த தொடர் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த தொடரை பிரின்ஸ் இமானுவேல் இயக்கி இருந்தார். தற்போது ராஜேந்திரன் இயக்கி வருகிறார். இதை அடுத்து நேத்ரா சீரியல் வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பாக இருக்கிறது. இது முழுக்க முழுக்க மாயாஜாலம் நிறைந்த தொடர். இந்த தொடர் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த தொடரும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது.

Advertisement