படு குண்டாக இருந்த ஸ்வர்ணமால்யா இப்போ மீண்டும் எப்படி ஆகிட்டார் பாருங்க.

0
22745
swarnamalya
- Advertisement -

தற்போது வேண்டுமானால் தொலைக்காட்சிகளில் பல்வேறு தொகுப்பாளினிகள் இருந்து வரலாம். ஆனால், 90ஸ் காலகட்டத்தில் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். அதிலும் அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிளுக்கு பல்வேறு ரசிகர்களும் இருந்து வந்தார்கள். 90ஸ் காலத்தில் சன் டிவி யில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ்,நீங்கள் கேட்ட பாடல் போன்ற பல நிகழ்ச்சிகளை நம்மால் மறக்கமுடியாது.அதே போன்று தான் இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் 90ஸ் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்வர்ணமால்யா.

-விளம்பரம்-

1981 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் வைஷ்னவா கல்லூரியில் படித்தவர். இவரது தந்தை பெயர் கணேஷ் மற்றும் அம்மாவின் பெயர் மாலினி மேலும் இவருக்கு ராதிகா என்ற அக்காவும் உள்ளார்.சிறு வயது முதலே நடிப்பிலும் பரதத்திளும் ஆர்வம் கொண்டதால் அமெரிக்கா சென்று அங்கு சினி பள்ளியில் படித்துவிட்டு சென்னை திரும்பினார்.தனது 3 வயது முதல் பரதம் கற்றுவந்த இவர் 17 வயதில் பாரதத்திற்கான யுவ கலா பாரதி என்ற விருதினை பெற்றவர். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் தனது கலை பயணத்தை தொடங்கினார்.

- Advertisement -

அதன் பின்னர் பல டீவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார்.இவர் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தது மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தில் தான். அந்த படத்தில் ஒரு சிறு கதா பாத்திரத்தில் நடித்திருந்தார் பின்னர் எங்கள் அண்ணா,மொழி போன்ற படங்களில் இரண்டாம் கட்ட ஹீரோயினியாக நடித்தார்.2002 இல் அர்ஜுன் ராம ராஜன் என்ற அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2004 இல் அவரை விவாகரத்து செய்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார்.சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் குறைந்து வர ஒரு கட்டத்தில் ஒரே அடியாக படங்களில் நடிக்காமல் போய் விட்டார்.அதன் பின்னர் பாரதி ராஜா இயக்கிய தேக்கத்தி பொண்ணு,சன் டிவி யில் ஒளிபரப்பான தங்கம் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

ஆனால், சீரியல்களில் வாய்ப்பு நிலைக்காததால் சென்னையில் ஒரு பாரத நாட்டிய பள்ளியை ஆரம்பித்து பல குழந்தைகளுக்கு பாரதம் கற்றுத்தந்து வருகிறார்.மேலும் பல்வேறு மேடைகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் நடனமாடிவருகிறார். இவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலோ திரைப்படங்களிலோ காண முடியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது புகைபடங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது .

-விளம்பரம்-

புகைப்படத்தில் படு குண்டாக இருந்த ஸ்வர்ணமால்யாவை கண்டு ரசிகர்கள் படு ஷாக் ஆனார்கள். இந்த நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில சமூக வளைத்ததில் வெளியாகியுள்ளது. அதில் தனது பருமனாக இருந்த உடலை மீண்டும் சற்று ஸ்லிம்மாக மாற்றியுள்ளார் ஸ்வர்ணமால்யா. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.,மேலும், நடிகை ஸ்வர்ணமால்யா மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது தான் அனைவரின் ஆசையும்.

Advertisement