28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஹீரோயினியாகும் குஷ்பு. அதுவும் மாபெரும் நடிகருக்கு ஜோடியா ?

0
4644
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் இருந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை குஷ்பு அவர்கள் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைத் தளங்களில் வெளியாகி உள்ளது. மேலும், இவர் நடிக்கும் படத்திற்கு ஹீரோ யார்?? என்றும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். மேலும்,இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் முதன் முதலாக 1980களில் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் 1990களில் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.

-விளம்பரம்-
Khusboo

இதற்கு பிறகு நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். அதோடு 80 கால கட்டங்களில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக திகழ்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் நடிகை குஷ்பூ அவர்கள் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த்,சரத்க்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். சினிமாவில் பிரபலமான திரைப்பட இயக்குனர் சுந்தர்.சியை 2001ம் ஆண்டு நடிகை குஷ்பூ அவர்கள் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் நடிகை குஷ்பு அவர்கள் தற்போது வெள்ளித்திரை படங்களில் குணசித்திர வேடங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவர் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் அரசியலில் சில காலம் பயணித்தார்.

இதையும் பாருங்க : திமிரு, தரம் கெட்ட நடிகை, காயத்ரி ரகுராமை கழுவி ஊற்றிய பிரபலம். இதான் காரணம்.

- Advertisement -

ஆனால், அரசியல் இவருக்கு ஒர்க் அவுட் ஆகாததால் மீண்டும் சினிமா துறைக்கு வந்து விட்டார். தற்போது கூட இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் குஷ்பு அவர்கள் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள புது படத்தில் நடிக்க உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. அதுவும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் குஷ்பு நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து இந்த படம் உறுதி செய்யப்பட்ட உடன் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறி உள்ளார்கள்.

Image result for rajini kushboo"

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்க உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. நடிகை குஷ்பு அவர்கள் 1992 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க உள்ளார் என்ற தகவல் தெரியவந்ததும் ரசிகர்கள் வியப்பில் உள்ளவர்கள் என்ற தகவல் வந்துள்ளது.

Advertisement