வடிவேலுவால் தான் படம் ஓடவில்லை என்று இயக்குனர் சுந்தர் சி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்து நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சுந்தர்.சி. இவர் 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ என்ற படத்தினை இயக்கியிருந்தார். இது தான் சுந்தர்.சி இயக்கிய முதல் தமிழ் திரைப்படம். இதில் ஹீரோவாக ஜெயராம் நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து ‘முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகி ராமன், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அன்பே சிவம், வின்னர், கிரி, லண்டன், சின்னா, இரண்டு, கலகலப்பு 1 & 2, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்ஷன்’ என அடுத்தடுத்து தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார் சுந்தர்.சி.
ஹூரோவாக சுந்தர்.சி :
பின் இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். 2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளி வந்த திரைப்படம் ‘தலைநகரம்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார். இதில் நாயகனாக சுந்தர்.சி நடித்திருந்தார். இது தான் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த முதல் தமிழ் திரைப்படம். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ‘வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு’ போன்ற பல படங்களில் சுந்தர்.சி நடித்து இருக்கிறார்.
சுந்தர் சி நடிக்கும் படங்கள்:
அதுமட்டும் இல்லாமல் அவர் தானே இயக்கிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். இறுதியாக சுந்தர் சி அரண்மனை 3 படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் சுந்தர் சி யின் காபி வித் காதல் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. தற்போது சுந்தர் சி அவர்கள் தலைநகரம் 2 படத்தில் நடித்து வருகிறார்.
சுந்தர் சி அளித்த பேட்டி:
தற்போது இந்த படத்தை முகவரி தொட்டி ஜெயா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வி இசட் துரை இயக்கி வருகிறார். இப்படி சுந்தர் சி இயக்கி நடித்த படங்கள் பெரும்பாலானவை காமெடி படங்களாக இருக்கும். சுந்தர் சி என்றாலே அவருடைய படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இல்லை என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு மொத்த காமெடி பேக்கேஜ் காம்போவாக கொடுப்பார். இந்த நிலையில் ஹீரோவாக சுந்தர் சி நடித்த தலைநகரம் படம் வெற்றி பெறாததற்கு காரணம் வடிவேலு தான் என்று கூறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தலைநகரம் 2 குறித்து சொன்னது:
அதாவது சமீபத்தில் சுந்தர் சி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், தலைநகரம் 2 படத்தை இயக்குனர் வி இசட் துறை இயக்குகிறார். நான் இந்த படத்தில் நடிக்கிறேன். தலைநகரம் படம் மொத்தமே 2 மணி நேரம் தான். ஆனால், அதில் 45 நிமிடம் வரும் காமெடி காட்சிகள் வரும். அது நன்றாக இருந்ததால் தான் மற்ற காட்சிகளை சுருக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், தற்போது தலைநகரம் 2 படத்தில் காமெடி இருந்தா நல்லா இருக்காது என்று நினைத்து அதை வைக்கவில்லை. அந்த படம் சரியாக போகாததற்கு காரணம் வடிவேல் உடைய காமெடி காட்சிகள் என்று மறைமுகமாக சுந்தர் சி கூறியிருக்கிறார்