அவர் சாவுக்கே வராத வடிவேலுவா எனக்கு உதவி செய்ய போறாரு – வாம்மா மின்னல் காமெடி நடிகர் உருக்கம்.

0
2152
- Advertisement -

வடிவேலு குறித்து நடிகர் பாவா லக்ஷ்மணன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாவா லட்சுமணன். இவர் பெரும்பாலும் வடிவேலு காம்பினேஷனில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நடிகர் பாவா லட்சுமணன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இப்போது எல்லாமே ஓடிடி மயமாகிவிட்டது. இதனால் எங்களுக்கு வேலையே கிடைப்பதில்லை. உங்களை மாதிரி youtube சேனல்கள் அழைத்து கொடுக்கும் வருமானத்தில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொரோனாவால் நான் செத்துப் போய்விட்டதாக கூறினார்கள். போஸ்டரெல்லாம் ஒட்டி விட்டார்கள்.

- Advertisement -

பாவா லக்ஷுமணன் பேட்டி:

பேட்டி கொடுத்த பின்னர் பின் தான் நான் உயிரோடு இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த அளவிற்கு சினிமா காரர்கள் கேவலமாக போய்விட்டார்கள். அந்த சம்பவத்தின் போது நான் திருச்சியில் இருந்தேன். சந்தானம் உள்ளிட்ட பல பிரபலங்கள் எனக்கு போன் செய்தெல்லாம் விசாரித்தார்கள். ஆனால், வடிவேலு மட்டும் என்னைக் கேட்கவில்லை. சூப்பர் குட் ஃப்லிம்சில் நான் மேலாளர் ஆக இருந்தேன். கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் அன்பாக நேர்மையாக இருப்பேன். அதனால் பலரும் எனக்கு வாய்ப்பு தந்தார்கள்.

சினிமா வாய்ப்பு:

அப்படித்தான் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இந்த கதாபாத்திரத்தில் முதலில் வடிவேல் தான் நடிக்க இருந்தது. அவரிடம் 40 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அவரால் முடியாது என்று சொன்னார். பின் என்னை வைத்து படம் எடுத்தார்கள். என்னுடைய நடிப்பை பார்த்து மெகா ஸ்டார் மம்முட்டி அவர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அதெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாது. அதே போல் வடிவேலுவுடன் இருந்தவர்கள் அவரைப் பற்றி குறை சொல்லி திட்டுகிறார்கள்.

-விளம்பரம்-

வடிவேலு குறித்து சொன்னது:

உண்மையில் பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால் வடிவேலு பலருடைய மனதை காயப்படுத்தி இருக்கிறார். அவருடைய அலுவலகத்திற்கு சென்றாலே எதற்கு வந்தாய்? வெளியே போ? வராதே? என்று தான் முகத்தில் அடித்தது போல் பேசுவார். நான் நாய் சேகர் படத்தின் போது அவரிடம் வாய்ப்பு கேட்டு போனேன். ஆனால், கூப்பிடுகிறேன் என்று சொல்லி கூப்பிடவே இல்லை. தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற நடிகர் வடிவேலுவா? விவேக்கா? என்று கேட்டால் நான் விவேக் தான் சொல்லுவேன். காரணம், சொன்ன நேரத்தில் சூட்டிங்க்கு வருவது தான் அவருடைய வழக்கம்.

சம்பளம் சரியாக பேசுவார். சொன்ன தேதியில் 24 மணி நேரமும் நடிப்பார். ஆனால், அந்த வடிவேலிடம் கிடையாது. கொரானா காலத்தில் விவேக் சார், மயில்சாமி, மனோபாலா எல்லோரும் எனக்கு உதவி இருந்தார்கள். எனக்கு சுகர் மாத்திரை வாங்கி தந்தார். எனக்கு ஷூட்டிங் இல்லை என்றால் இப்போது யாரிடம் காசு கேட்பது என்று தெரியவில்லை. மயில்சாமி இருந்தவரை எனக்கு அந்த குறை இல்லை. வடிவேலுவிடம் எந்த உதவியும் எதிர்பார்க்க முடியாது. அல்வா வாசு மதுரையில் இறந்தார். வடிவேலும் மதுரையில் இருந்தும் அவரை போய் பார்க்கவில்லை. நான் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் நபர்களில் வடிவேலு ஒருவர். அவர் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை.

நாய் சேகர் படத்தில் எங்களை போடாமல் இருந்தது கூட பரவாயில்லை. ஒரு பேட்டியில் பழைய ஆட்களை எல்லாம் கட் செய்துவிட்டேன். புதிய ஆட்களை போட்டு இருக்கிறேன் என்று கூறினார். நாங்கள் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தை தாண்டவில்லை. ஆனால், நாய் சேகரில் நடித்தவர்களுக்கு 50000 வரை சம்பளம் கொடுத்து இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே எனக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது. காலில் எனக்கு அடிபட்டுவிட்டது. அதனால் பழைய உற்சாகமும் சந்தோஷமும் என்னிடமில்லை. இன்னும் ஒரு மாதத்தில் பழைய நிலைமைக்கு திரும்பி விடுவேன். நம்பிக்கையோடு இருக்கிறேன் வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

Advertisement