ஷூட்டிங்ல கூட வடிவேலு அப்படி தான் பண்ணுவாரு – சுந்தரா டிராவல்ஸ் நடிகை சொன்ன உண்மை.

0
803
Radha
- Advertisement -

வடிவேலு ஷூட்டிங்கில் ஸ்பாட்டில் இப்படி தான் செய்வாரு என்று நடிகை ராதா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி போன்ற பலர் நடிப்பில் வெளியான ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா. சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடித்த இவர் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றியடையாத காரணத்தினால் தமிழில் இவருக்கு பெரிதாக படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். பின் நடிகை ராதா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவகாரத்து செய்துவிட்டார்கள்.

- Advertisement -

ராதா திருமண வாழ்க்கை:

முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த ராதாவிற்கு, எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த வசந்த ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வசந்தனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் நடிகை ராதா உடன் ஏற்பட்ட காதலால் வசந்தராஜன் ராதாவும் திருமணம் செய்து கொண்டனர். பின் வசந்த ராஜனை திருமணம் செய்த ராதா கடந்த ஓராண்டாக அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

மீண்டும் கம்பேக் கொடுத்த ராதா:

இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் நடிகை ராதா தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அதனை அப்போதே வாபஸ் பெற்று விட்டார். இப்படி குடும்ப பிரச்சனை காரணமாக சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நடிகை ராதா சமீபத்தில் தான் பைரவி என்ற சீரியலில் நடித்தார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா 2 சிரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

நடிகை ராதா அளித்த பேட்டி:

இந்த சீரியலின் மூலம் மீண்டும் நடிகை ராதா கம்பேக் கொடுத்திருந்தார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றிருந்தது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்திருந்தது. இதனை அடுத்து இவர் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ராதா அளித்த பேட்டியில் வடிவேலு குறித்து கூறியது, வடிவேல் சார் ரொம்ப சப்போர்ட் செய்வார். அன்பாக இருப்பார். அப்போது ரொம்ப நட்பாக இருந்தார்.

வடிவேலு குறித்து சொன்னது:

டயலாக்ஸ் எல்லாம் நான் எப்படி பேசுகிறேனோ அதற்கு கோப்ரேட் பண்ணி பண்ணுவார். இப்போது வடிவேல் சார் எப்படி என்று எனக்கு தெரியாது. அப்போது எல்லாம் ரொம்ப உதவி செய்வார். அந்த பொறாமை எல்லாம் அவரிடம் இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் நானும், அம்மாவும், வடிவேல் சாரும் ஒன்றாக தான் அமர்ந்து சாப்பிடுவோம். என்னுடைய அம்மாவை அவர், பவானி அம்மா வா மா என்று தான் அழைப்பார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement